Thats Tamil

Syndicate content Oneindia.in - thatsTamil
Tamil rss gives xml feed of Tamil news. That's Tamil is Tamil online.
Updated: 6 hours 15 min ago

கரூர் வரும் விஜயகாந்த் 'மச்சான்' சுதீஷுக்கு காத்திருக்கும் சோதனை

08 Sep, 2010
கரூர்: கரூர் மாவட்ட தேமுதிக-வில் நிலவி வரும் கோஷ்டி பூசல் கரூருக்கு தேமுதிக மாநில இளைஞரணிச் செயலாளர் எல்.கே. சுதீஷ் வரும்போது பெரிதாக வெடிக்கும் என பரபரப்பாக பேசப்படுகிறது.கரூரில் வரும் 10-ம் தேதி அன்று தேமுதிக பிரமுகர் சக்திவேல் திருமணத்தை நடத்தி வைக்கவும், சோமூர் ரவி என்பவர் வீ்டு கிரகப் பிரவேசத்திற்கும் சிறப்பு அழைப்பாளராக தேமுதிக இளைஞரணி
Categories: General News

50 நோயாளிகளை காவு வாங்கிய ராஜஸ்தான் டாக்டர்கள் ஸ்டிரைக் வாபஸ்

08 Sep, 2010
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு மருத்துவர்கள் நடத்திய வேலை நிறுத்தத்தால் 50 நோயாளிகள் பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்தப் பேரிழப்புக்குப் பின்னர் இப்போது டாக்டர்கள் ஸ்டிரைக்கை வாபஸ் பெற்றுள்ளனர்.ராஜஸ்தான் மாவட்டம் ஜோத்பூரில் உள்ள மருத்துவக் கல்லூரிக்குள் சமீபத்தில் போலீசார் தடியடி நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த அரசு மருத்துவர்கள் போலீசாரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் 5 மாவட்டங்களில்
Categories: General News

நீண்ட நாள் நண்பருக்கு உதவிக் கரம் நீட்டிய மு.க. ஸ்டாலின்

08 Sep, 2010
ஈரோடு: நண்பரும், முன்னாள் திமுக இளைஞரணி மாநிலத் துணை அமைப்பாளருமான எவரெஸ்ட் கணேசனுக்கு மு.க. ஸ்டாலின் மருத்துவ உதவி செய்து பேருதவி புரிந்துள்ளாராம்.மு.க. ஸ்டாலின், திருச்சி அன்பில் பொய்யாமொழி, ஈரோடு எவரெஸ்ட் கணேசன் ஆகயோர் ஒரு காலத்தில் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள். இதில் அன்பில் பொய்யாமொழி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு
Categories: General News

நடிகர் முரளி உடலுக்கு ரஜினி,திரையுலகினர் அஞ்சலி-நாளை தகனம்-படப்பிடிப்புகள் ரத்து

08 Sep, 2010
சென்னை: மறைந்த நடிகர் முரளிக்கு நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகினர் திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். நாளை அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. இதையடுத்து படப்பிடிப்புகள் அனைத்தும் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.நடிகர் முரளி இன்று அதிகாலையில், மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவால் தமிழ்த் திரையுலகம் அதிர்ச்சியடைந்துள்ளது.அவரது உடல் வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு
Categories: General News

ரசிகர்களின் 'இதயம்' கவர்ந்த முரளி!

08 Sep, 2010
இதயமே, இதயமே உன் மெளனம் என்னைக் கொல்லுதே....இந்தப் பாடலை வலித்து, ரசித்தவர்கள் எண்ணிக்கை எக்கச்சக்கம். அந்தப் பாடலும் சரி, அதில் நடித்த முரளியும் சரி தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாத அளவுக்கு தமிழ் சினிமாவில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளனர். தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு கலைஞர் முரளி. அந்தப் படத்தில் கடைசி வரை தனது காதலை
Categories: General News

சாமி, அனகாவிடம் போலீசார் விசாரணை: இருவர் மீதும் சந்தேகம்

08 Sep, 2010
சிந்து சமவெளி பட விவகாரத்தால் தனது கார் உடைக்கப்பட்டதாகவும், இந்தப் படத்தில் விவகாரமான கேரக்டரில் நடித்ததால் தனக்கு மிரட்டல் வருவதாகக் கூறிய நடிகை அனகாவிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.சாமியிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது அவர் மீதே போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.கார் உடைக்கப்பட்டது தொடர்பாக அவர் போதிய விவரங்ளைத் தரவில்லை என்றும், அவரை செல்போனில் மிரட்டியதாகக் கூறப்படும் விஷயத்திலும் அவர்
Categories: General News

சென்னை-எஸ்.ஐ. வீட்டில் 42 பவுன் தங்க நகைகள் திருட்டு

08 Sep, 2010
சென்னை: சென்னையில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வீட்டில் புகுந்த திருடர்கள் 42 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர். மேலும் சென்னையில் ஒரே நாளில் 6 இடங்களில் திருட்டுச் சம்பவங்கள் நடந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணி புரிபவர் மகாதேவன். புது வண்ணாரப்பேட்டை வெங்கடேசன் தெருவில் வசித்து வருகிறார். இவரது வீட்டின்
Categories: General News

ஆஸ்திரேலியாவில் மைனாரிட்டி அரசை அமைக்கும் ஜூலியா கிலார்ட்

08 Sep, 2010
கான்பெரா: ஆஸ்திரேலியாவில் 2 சுயேச்சைகளின் ஆதரவுடன் ஜூலியா கிலார்ட் சிறுபான்மை அரசுக்குத் தலைமை ஏற்கவுள்ளார். சுயேச்சைகளின் ஆதரவு அவருக்குக் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து மீண்டும் அவரே பிரதமராக தொடர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவில் சமீபத்தில்நடந்த தேர்தலில் ஜூலியா தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. அதேபோல எதிர்க்கட்சிக் கூட்டணிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. 3 சுயேச்சைகள் கையில் யார்
Categories: General News

கிரிக்கெட் சூதாட்டத்தில் நீத்துவுக்குத் தொடர்பு?

08 Sep, 2010
பாகிஸ்தான்: கிரிக்கெட் சூதாட்ட ஊழலில் நடிகை நீத்து சந்திராவுக்குத் தொடர்பு இருப்பதாக புதுச் செய்தி கிளம்பியுள்ளது. ஆனால் இதை அவர் மறுத்துள்ளார்.நீத்து சந்திராவுக்கும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சிக்கியுள்ள பந்து வீச்சாளர் முகம்மது ஆசிபுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக அந்த செய்தி கூறுகிறது.ஆனால் இதை நீத்து மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவரது சார்பில் அவரது பிஆர்ஓ பார்கவாகர் வெளியிட்டுள்ள
Categories: General News

ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையவருக்கு ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியா?: பாஜக

08 Sep, 2010
டெல்லி: பாஜகவின் கடும் எதிர்ப்பை மீறி, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமஸ் நியமிக்கப்பட்டார்.இவர் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையவர் என்று கூறி அவரது பதவியேற்பு விழாவை பாஜக புறக்கணித்தது.மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருந்த பிரதியுஷ் ஷாவின் பதவிக் காலம் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதையடுத்து புதிய ஆணையரை நியமிப்பது தொடர்பான தேர்வு கமிட்டி கூட்டம்
Categories: General News

சரிகா படத்தில் உதவி இயக்குநரான அக்ஷரா

08 Sep, 2010
தாயார் சரிகா நடித்து வரும் இந்திப் படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றுகிறாராம் கமல்ஹாசனின் மகள் அக்ஷரா.கமல்ஹாசனுக்கு சரிகா மூலம் இரண்டு புதல்விகள். மூத்தவர் ஸ்ருதி, இளைய மகள் அக்ஷரா. ஸ்ருதி, தனது பெற்றோர் வழியில் நடிகையாகி விட்டார். அதேசமயம், இசை உள்ளிட்ட பிற துறைகளிலும் திறமைசாலியாக உள்ளார்.இளையவரான அக்ஷரா மும்பையில் செட்டிலாகி விட்டார். அங்கு பல்வேறு துறைகளில்
Categories: General News

இப்படியொரு சாதனையை சென்னை மாநகராட்சி பார்த்ததில்லை-ஸ்டாலின்

08 Sep, 2010
சென்னை: இப்படியொரு வரலாற்று சாதனையை சென்னை மாநகராட்சி பார்த்ததில்லை, இனி பார்க்க முடியுமா என்பதும் தெரியவில்லை என்று துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.சென்னை ஆயிரம் விளக்கு பகுதிக்கு உட்பட்டவர்களுக்கு இலவச கலர் டி.வி. வழங்கும் நிகழ்ச்சி தியாகராயநகரில் நடந்தது.டி.விக்களையும், திருமண உதவி தொகையையும் வழங்கி ஸ்டாலின் பேசுகையில், 2006ம் ஆண்டு முதல்வசராக கருணாநிதி பொறுப்பேற்றவுடன்
Categories: General News

கூட்டணியில் புதிய கட்சிகள்: காங்கிரசுடன் பேசி முடிவு- கருணாநிதி

08 Sep, 2010
திருச்சி: திமுக-காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது, அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலிலும் திமுக மாபெரும் வெற்றி பெறும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார். திருச்சியில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:கேள்வி: காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை மத்திய அரசு கெஜெட்டில் வெளியிட வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளதே?.கருணாநிதி: காவிரி நடுவர் மன்றம் அமைத்த
Categories: General News

3வது அணி..பாமகவின் முயற்சி காலம் கடந்தது: திருமாவளவன்

08 Sep, 2010
கோவை: மூன்றாவது அணி அமைந்தால், அதற்குத் தலைமையேற்க பாமக விரும்புவது அக் கட்சியின் காலம் கடந்த முயற்சி என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.கோவையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல சிறப்புச் செயற்குழு கூட்டத்திற்குப் பின் நிருபர்களிடம் பேசிய அவர்,சட்டசபை தேர்தலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தயாராகி வருகிறது. 80 தொகுதிகளை தீர்மானிக்கக்
Categories: General News

மின்வேலி அமைத்து வனவிலங்குகளைக் கொன்று வாய்க்காலில் வீசிய 3 பேருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம்

08 Sep, 2010
வி.கே.புரம்: மணிமுத்தாறு அருகே மின்வேலி அமைத்து மிளா மற்றும் கான்று பன்றிகளைக் கொன்று உடலை வாய்க்காலில் வீசிய 3 பேருக்கு வனத்துறை ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. மணிமுத்தாறு அருகே பாபநாசம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வேம்மையாபுரம் தனியார் தோட்டத்தில் மின்வேலி அமைத்து 4 மிளா மற்றும் 4 காட்டுப் பன்றிகளைக் கொன்று அதன் உடலை அருகே உள்ள
Categories: General News

திருவண்ணாமலை அருகே பஸ்- லாரி நேருக்கு மோதல்-9 பேர் கருகி பலி

08 Sep, 2010
திருவண்ணாமலை: திருண்ணாமலை அருகே அரசு பஸ்சும் - லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 9 பேர் தீயில் கருகி பலியானார்கள்.வேலூரிலிருந்து கடலூரை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. இந்த பேருந்து திருவண்ணாமலை அருகே மல்லவாடியை நோக்கி சென்ற போது, எதிரே வந்த லாரி நேராக பேருந்து மீது மோதியது. இதில்
Categories: General News

ஜெயலலிதாவுக்குப் பாதுகாப்பு கோரி பிரதமரிடம் அதிமுக முறையீடு

08 Sep, 2010
டெல்லி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு போதிய பாதுகாப்பு வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து அதிமுக எம்.பிக்கள் குழு முறையிட்டது.அதிமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14 பேர் பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.இந்த சந்திப்பு குறித்து அதிமுக நாடாளுமன்றக் கட்சித் தலைவர் தம்பித்துரை கூறுகையில்,
Categories: General News

விபச்சார வழக்கு-18 ஆண்டுகளுக்குப் பின் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட டிஎஸ்பி

08 Sep, 2010
ஊட்டி: விபச்சார வழக்கில் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் முன்னாள் டிஎஸ்பி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 1987-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த எத்திராஜ் என்பவர் குற்றப் பிரிவு டிஎஸ்பியாக இருந்தார். அப்போது 6.4.87 அன்று குன்னூர் அருகே உள்ள வெலிங்டனை சேர்ந்த சசிகலா, விஜயா ஆகிய 2 பெண்களை காணவில்லை என்று அவர்களது தந்தை
Categories: General News

2 வழக்குகளிலிருந்து முத்துலட்சுமி விடுதலை-கர்நாடக கோர்ட் உத்தரவு

08 Sep, 2010
மைசூர்: கர்நாடக மாநிலம் ராமபுராவில் உள்ள காவல் நிலையத்தை சந்தனக் கடத்தல் வீரப்பன் கும்பல் தாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கிலிருந்து வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியை விடுதலை செய்து கர்நாடக கோர்ட் உத்தரவிட்டது.கடந்த 1992-ம் ஆண்டு மே மாதம், கர்நாடக மாநிலம் ராமபுரா போலீஸ் நிலையத்தை வீரப்பன் கும்பல் தாக்கியதில், 5 போலீசார் கொல்லப்பட்டனர். அதே ஆண்டு ஆகஸ்டு
Categories: General News

தூத்துக்குடியில் 2012-ம் ஆண்டு முதல் 7 ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி

08 Sep, 2010
தூத்துக்குடி: தூத்துக்குடியில் அமையும் தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 2012ம் ஆண்டு முதல் 7000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடியில் அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது. தலைவர் மணி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ராஜாசங்கரலிங்கம், துணை தலைவர்கள் மனோகரன், ஜோபிரகாஷ், தமிழரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த் பாரத்
Categories: General News