BBC Tamil
காப்புரிமை பிபிசி 2009. பிற இணைய தளங்களில் உள்ளவற்றுக்கு பிபிசி பொறுப்பல்ல
Updated: 3 hours 38 min ago
"இந்திய பிரட்டன் வர்த்தகம் இரட்டிப்பாகும்"
பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்த்துவதற்கு, இரு நாட்டு பிரதமர்களுக்கிடையில் புதிய ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டுள்ளது
Categories: General News
கோஹினூர் கோரிக்கை நிராகரிப்பு
பிரிட்டிஷ் அரச குடும்பத்திடம் இருக்கும் கோஹினூர் வைரத்தை
இந்தியாவுக்கு திரும்ப அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை ஏற்க பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் மறுப்பு
Categories: General News
சுத்தமான குடிநீர் அடிப்படை மனித உரிமை: ஐநா
சுத்தமான குடிநீரும், முறையான கழிப்பறை வசதியும் உலகிலுள்ள அனைவரின் அடிப்படை மனித உரிமை என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது
Categories: General News
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி
லண்டனில் உண்ணாவிரதம் இருந்தபோது இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்
Categories: General News
வளர்ச்சி பாதையில் கிழக்கு மாகாணம்?
இலங்கையில் கிழக்கு மாகாணம் அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டு மூன்று வருடங்கள் ஆகியுள்ள போதிலும் அங்கு முற்றிலுமாக இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை என பலதரப்பினர் கூறுகிறார்கள்.
Categories: General News
இந்தியாவில் பிரிட்டிஷ் பிரதமர்
இந்தியா வந்துள்ள பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் அவர்கள், இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், பிரிட்டனில் புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்கும் இந்தப் பயணத்தில் முன்னுரிமை அளித்திருக்கிறார்
Categories: General News
முறிகண்டியில் மீள் குடியேற்ற சிக்கல்
இலங்கையின் வடக்கே பல இடங்களில் இராணுவத் தேவைக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால், இடம் பெயர நேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்புவது கேள்விக் குறியாகியுள்ளது
Categories: General News
சச்சின் 48 ஆவது சதமடித்தார்
சச்சின் டெண்டூல்கர் தனது 48 ஆவது டெஸ்ட் சதத்தை அடித்துள்ளார். வீரேந்தர் ஷேவாக் ஒரு ஓட்டத்தில் சதத்தை தவற விட்டார்
Categories: General News
பாக் விமான விபத்தில் 152 பேர் பலி
பாகிஸ்தானில் ஏற்பட்ட ஒரு விமான விபத்தில் அதிலிருந்த 152 பேரும் பலியாகியுள்ளனர். இந்த விமானம் கராச்சியிலிருந்து இஸ்லாமாபாதுக்கு சென்று கொண்டிருந்தது
Categories: General News
"காமன்வெல்த் போட்டிகள் வீண்செலவு"
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிடுவது வீண் செலவு என்று முன்னாள் அமைச்சர் மணி சங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.
Categories: General News
கடற்படை முகாமுக்கு எதிர்ப்பு
அம்பாரை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் கடற்படை முகாமொன்று அமைக்கப்பட்டிருப்பதை உள்ளூர் மக்கள் எதிர்க்கின்றனர்.
Categories: General News
டில்லியில் பர்மிய சர்வாதிகாரி
பர்மாவின் ராணுவ ஆட்சியின் தலைவர் ஜெனரல் ஷ்வே அவர்களுக்கு இந்தியாவில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
Categories: General News
போலீசுக்கு எதிராக போராட்டம்
அம்பாறை மாவட்டத்தில் ராகம்வெல கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் தமது கிராமத்திலிருந்து பொலிசார் வெளியேறவேண்டும் எனவும் கூறி பாணம சந்தியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Categories: General News
இலங்கை அணி ரன் குவிப்பு
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் முடிவில் இலங்கை அணி வலுவான நிலையில் உள்ளது.
Categories: General News
பிற்பாடுதான் மதமாற்றம்: உமா சங்கர்
இந்திய அரசுப் பணி வேலைக்கு தேர்வு எழுதும்போது இந்து தலித்தாகத்தான் இருந்ததாகவும் பின்னர்தான் கிறிஸ்தவராக மதம் மாறியுள்ளதாகவும் பதவி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள உமா சங்கர் தெரிவித்துள்ளார்.
Categories: General News
அமித் ஷா கைது
இந்தியாவில் கொலை மற்றும் கடத்தல் குற்றம் சாட்டப்பட்ட குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா கைது செய்யப்பட்டுள்ளார்.
Categories: General News
செய்தி உண்மையில்லை - பாகிஸ்தான்
தாலிபான்களுக்கு தீவிர ஆதரவாக பாகிஸ்தானின் உளவுப்படை செயற்பட்டது என்ற குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் கடுமையாக நிராகரித்துள்ளது.
Categories: General News
இலங்கை செல்கிறார் இந்திய அதிகாரி
இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் விரைவில் இலங்கை செல்வார் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்
Categories: General News
பர்மிய தலைவரின் விஜயத்துக்கு எதிர்ப்பு
பர்மிய தலைவர் ஜெனரல் தான் ஷ்வேவின் இந்திய விஜயத்தை எதிர்த்து புது டெல்லியில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.
Categories: General News
இரானுக்கு எதிராக புதிய தடைகள்
இரானின் அணுசக்தித்திட்டம் குறித்த விஷயத்தில், அந்த நாட்டுக்கெதிராக புதிய கடுமையான தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் முறையாக விதித்திருக்கிறது.
Categories: General News




