தினமலர்
select Top 10 id,NTitle,NAd_Date,NDescription from DM_News where NLNews =1 order by id desc
Updated: 3 hours 33 min ago
சுயஉதவிக் குழு மோசடி பெண் வக்கீல் கைது
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே அச்சம்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி பொன்மாரி(35). இருவரும் வக்கீல்கள். பொன்மாரி, பெண்கள் சுயஉதவிக் குழுவின் தலைவியாக செயல்பட்டார். இவரது குழு பெண்கள் 13 பேரிடம் வசூலித்த பணம் 51 ஆயிரத்தை அவர் வங்கியில் செலுத்தவில்லை.
இதுகுறித்து குழுவின் மற்ற உறுப்பினர்கள் எஸ்.பி.,ஆஸ்ரா கார்க்கிடம் புகார் செய்தனர். மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். உறுப்பினர்கள் கடன் வாங்கியது போல இவரே பணத்தைக் கையாடல் செய்ததும், வசூலித்த பணத்தை செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்ததால் அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்.
Categories: General News
தனியார் பஞ்சு மில்லில் தீ விபத்து
சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்தவர் மகேந்திரன். இவருக்கு சொந்தமான பஞ்சு மில் ஒன்று உள்ளது. இந்த மில்லில் நள்ளிரவு நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இத் தீ விபத்தில் விலைஉயர்ந்த பொருட்கள் மற்றும் இயந்திரங்களின் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
Categories: General News
புதைகுழியில் சிக்கி புது மாப்பிள்ளை பலி
ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தழையூத்து அருவியில் குளித்த புதுமாப்பிள்ளை, புதைகுழியில் சிக்கி இறந்தார்.தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் ஜவகர்மைதீன் (27). இவர், சென்னையில் கம்ப்யூட்டர் சென்டர் வைத்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மாதங்களே ஆகிறது. ஜவகர்மைதீன் தன்னுடைய உறவினர் 11 பேருடன் ஒட்டன்சத்திரம் அருகிலுள்ள விருப்பாட்சி தழையூத்து அருவியில் நேற்று குளிக்க சென்றார். அருவியில் குளித்துக் கொண்டிருந்த போது ஆழமான இடத்திற்கு சென்ற ஜவகர்மைதீன், புதைகுழியில் சிக்கி நீரில் மூழ்கி இறந்தார். இப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்ததால் சடலத்தை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
Categories: General News
தப்பி ஓடிய வக்கீல் கைது
மதுரை : மதுரை ஐகோர்ட்டில் போலீசாரிடமிருந்து தப்பிய வக்கீல் எழிலரசு கைது செய்யப்பட்டார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஐகோர்ட்டில் தமிழை வழக்காடும் மொழியாக்க வலியுறுத்தி, ஆறு வக்கீல்கள் உண்ணாவிரதம் இருந்தனர். கடந்த 18ல் வக்கீல் எழிலரசு தவிர, மற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.இதில், வக்கீல் ராஜேந்திரன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மற்றவர்கள் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். இன்றும், நேற்றும் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர். இதில், வக்கீல்கள் நடராஜன், பகத்சிங் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைக்கு மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.இவர்களுக்கு ஆதரவாக காலை வக்கீல்கள் 15 பேர், சிறை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனர். இதற்கிடையே, தலைமறைவாக இருந்த எழிலரசு, மாவட்ட கோர்ட் வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்தார். போலீஸ் வருவதை அறிந்து அங்கிருந்து மாயமானார். மதியம் கோர்ட்டின் மேற்கு நுழைவாயில் பகுதியில் நின்றிருந்த எழிலரசுவை போலீசார் கைது செய்து, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
Categories: General News
சிறை கைதிகள் மாற்றம்
திருவாடானை : செம்மொழி மாநாடை முன்னிட்டு நான்கு கிளை சிறை கைதிகள் முதுகுளத்தூர் சிறைக்கு மாற்றப்பட்டனர்.கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாடை முன்னிட்டு வேடசந்தூர், திருமங்கலம், அருப்புகோட்டை, திருவாடானை ஆகிய கிளை சிறையிலுள்ள கைதிகளை முதுகுளத்தூர் சிறைக்கு மாற்றும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி திருவாடானை கிளை சிறைச்சாலையில் உள்ள ஆறு கைதிகளை பாதுகாப்புடன் முதுகுளத்தூர் சிறைக்கு கொண்டு சென்றனர். கைதிகள் மாற்றப்பட்ட நிலையில் கிளை சிறைகளில் உள்ள போலீசார் மதுரை மத்திய சிறை பணிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
Categories: General News
ஒரு ரூபாய் அரிசி திட்டத்தில் முறைகேடு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை : மு.க. அழகிரி
Categories: General News




