யாஹூ

Syndicate content
Yahoo! Tamil
Updated: 7 hours 47 min ago

யாழில் வெடிச்சத்தம்: மக்களை திசை திருப்ப சிறிலங்க அரசு சதி?

26 Jan, 2010
யாழ்ப்பாணம்: சிறிலங்காவில் இன்று அதிபர் தேர்தல் நடந்து வரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் வேட்பாளர் பொன்சேகாவுக்கு காணப்படும் ஆதரவு நிலையை குலைக்க அந்நாட்டு அரசு வெடிகுண்டுகளை வீசி மக்களை பீதியடையச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.
Categories: General News

சிறிலங்காவில் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு துவக்கம்

26 Jan, 2010
கொழும்பு: சிறிலங்காவின் புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் அந்நாட்டு நேரப்படி இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. நாடு முழுவதும் 11 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
Categories: General News

எத்தியோப்பியா விமான விபத்து: 34 சடலங்கள் மீட்பு

26 Jan, 2010
பெய்ரூட்: லெபனான் கடலோரப் பகுதியில் எத்தியோப்பிய விமானம் விபத்துக்குள்ளான கடல் பகுதியில் இருந்து இதுவரை 34 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories: General News

மீண்டும் பனிமூட்டம்: டெல்லியில் விமான போக்குவரத்து நிறுத்தம்

26 Jan, 2010
புதுடெல்லி: தலைநகர் புதுடெல்லியில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் காணப்பட்டதால் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
Categories: General News