கோயம்புத்தூர் - Coimbatore

கோயம்புத்தூர்
தமிழகத்தின் முக்கிய தொழில் . குறுகிய காலத்தில் அபார வளர்ச்சி.

நகர வழக்கங்கள்:
கோவை என்றழைக்கப்படும் கோயம்புத்தூர் தமிழகத்தின் முக்கிய தொழில் நகரம். பரப்பளவில் தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய நகரம். தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று பெயர் பெற்ற நகரில் சுமார் 30,000 சிறிய, பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. துணி மில்கள், பம்ப் செட்டுகள், கிரைண்டர்கள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் ஆகியவற்றில் இந்திய அளவில் கோவைக்கு தனி இடம் உண்டு.

மேற்குத் தொடர்ச்சி மலையின் பாலக்காட்டு இடைவெளி வழியே வரும் காற்று நகரின் இதமான க்ளைமேட்டுக்கு காரணமாக இருக்கிறது. ஆனால் மழை மிகக் குறைவு. கோவையில் விநியோகிக்கப்படும் சிறுவாணி நதியின் நீருக்குத் தனி சுவை.

முக்கிய இடங்கள்:
பேரூர் பட்டீஸ்வரஸ்வாமி கோவில்:
பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். சிவன், பட்டீஸ்வரனாகவும், பார்வதி பச்சை நாயகியாகவும் எழுந்தருளியுள்ளார்கள். கரிகால் சோழனால் கட்டப்பட்ட இந்தக் கோவில் நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கனகசபை மண்டபத்திலும், இதர மண்டபங்களிலும் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் காணத்தக்கவை.

மருதமலை முருகன் கோவில்:
நகரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் சிறிய குன்றின் மீது அமைந்துள்ள கோவில் முருகனின் ஆறு படை வீடுகளுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெற்ற கோவிலாகும்.

ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில்:
நகர் மத்தியில் வைசியாள் தெருவில் அமைந்துள்ளது. நவராத்திரி உற்சவங்கள் சிறப்பாக கொண்டாடப்படும்.

கோவைக் குற்றாலம்:
கோவையிலிருந்து 37 கி.மீ. தொலைவில் மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில், சிறுவாணி நதியில் அமைந்துள்ளது. வனப்பகுதி என்பதால் மாலை 5 மணிக்கு மேல் அனுமதிக்கப்படுவதில்லை.

வ.உ.சி. பூங்கா:
வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவாக அமைக்கப்பட்ட பூங்கா. சிறு மிருகக்காட்சி சாலை, சிறுவர் ரயில், சிறுவர் விளையாட்டுக் கருவிகள் ஆகியவை உள்ளன.

Top மேலேGo Top
அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்:
ஊட்டி (90 கி.மீ. வட மேற்கு):
மிகப் பிரபல மலை வாசஸ்தலம். அதிக சுற்றுலாப் பயணிகள் மற்றும் மக்கள் பெருக்கத்தால் திணறினாலும் இன்றும் எல்லோரையும் ஈர்க்கிறது.
குன்னூர்:
ஊட்டி செல்லும் வழியில் உள்ள மலை வாசஸ்தலம். சிம்ஸ் பார்க் பிரபலம்.
முதுமலை சரணாலயம்:
ஊட்டி வழியாக தமிழக எல்லையில் உள்ள பெரிய சரணாலயம்.
மலம்புழா அணை:
பாலக்காடு அருகில்.
ஆனைமலை:
பழனி - (100 கி.மீ., தெற்கு):
குன்றின் மீதமைந்த முருகன் கோவில். ஆறு படை வீடுகளில் ஒன்று.
அமராவதி அணை:
திருமூர்த்தி அருவி: