அதிக மக்கள் வாழும் 50 நகரங்கள்- 50 Populous Cities

அதிக மக்கள் வாழும் 50 நகரங்கள்
உலகில் அதிக ஜனத்தொகை கொண்ட முதல் 50 நகரங்களின் பட்டியலைப் பற்றிய அலசல். பட்டியல் பக்கத்தின் விலாசம்.

உலகில் அதிக ஜனத்தொகை கொண்ட நகரங்களில் முதலில் வருவது டோக்கியோ (சுமார் 3.5 கோடி பேர்).
நியூயார்க் இரண்டாமிடத்திலும் (2.02 கோடி), தென்கொரியாவின் தலைநகர் சியோல் மூன்றாவது
இடத்திலும் (1.99 கோடி) இருக்கிறது.

தெற்காசியா

தெற்காசியாவில் அதிக மக்கள் வாழும் நகரம் மும்பை. 1.79 கோடி மக்கள் வசிக்கும் மும்பை உலகில்
ஆறாவது இடத்தில் இருக்கிறது. தொடர்ந்து,

கொல்கத்தா (கல்கத்தா) 14-வது இடம்
கராச்சி 16-வது இடம்
டெல்லி 19-வது இடம்
தாகா, பங்களாதேஷ் 24-வது இடம்
சென்னை 34-வது இடம்
ஹைதராபாத், இந்தியா 35-வது இடம்
லாகூர் 36-வது இடம்
பெங்களூர் 43-வது இடம்

ஆகிய இடங்களில் இருக்கிறது.

தென் கிழக்கு ஆசியா

தென்கிழக்காசியாவில் முதலாவதாக மணிலா உலகின் 10வது இடத்திலும் (1.35 கோடி). தொடர்ந்து,

ஜகார்த்தா, இந்தோனேசியா 15-வது இடம்
பாங்காக், தாய்லாந்து 31-வது இடம்

ஆகிய இடங்களில் இருக்கிறது. சிங்கப்பூர், கோலாலம்பூர் ஆகியவை முதல் 50க்குள் வரவில்லை.

ஆஸ்திரேலியா, ஐரோப்பா

இந்த பட்டியலில் முற்றிலும் விடுபட்டுப் போன கண்டம் ஆஸ்திரேலியா. ஐரோப்பாவின் அதிக மக்கள் வாழும்
நகரமான மாஸ்கோ உலக அளவில் 12-வது இடத்தில் தான் இருக்கிறது.

முழுப் பட்டியலையும் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.