ஐக்கிய அமெரிக்க குடியரசு (USA) - U.S.A.

ஐக்கிய அமெரிக்க குடியரசு (USA)
உலகின் பெரிய அண்ணன். 27 கோடி மக்கள்.

usaflag யு.எஸ்.ஏ - புள்ளி விபரங்கள்:

அதிகாரபூர்வ பெயர் ஐக்கிய அமெரிக்க குடியரசு
United States of America
இருக்குமிடம் வட அமெரிக்கா, வட அட்லாண்டிக் சமுத்திரம் மற்றும் வட பசுபிக் சமுத்திரத்தின் எல்லை, கனடா, மெக்ஸிகோ
பூகோள குறியீடு 38 00 வடக்கு, 97 00 மேற்கு
மொத்தப் பரப்பு 9,629,091 சதுர கி.மீ.
மொத்த நிலம் 9,158,960 சதுர கி.மீ.
கடற்கரை 470,131 சதுர கி.மீ.
பணம் (கரன்சி) US டாலர் (USD)
அண்டை நாடுகள் (எல்லை) கனடா 8,893 கி.மீ., க்யூபா 29 கி.மீ., மெக்ஸிகோ 3,326 கி.மீ.
தலைநகர் வாஷிங்டன்

சில துளிகள்:
மக்கள்தொகை 27 கோடி.

முதலில் குடியேறியவர்கள் ஆசிய மக்கள் என நம்பப்படுகிறது. இவர்கள் அமெரிக்க இந்தியர்கள் (செவ்விந்தியர்கள்)என்றழைக்கப்படுகிறார்கள். இந்தியாவிலிருந்து தற்போது குடியேறுபவர்களை இந்திய அமெரிக்கர்கள் என்று அழைக்கிறார்கள்.

உலகிற்கே பெரிய அண்ணன் ஆகக்கூடிய வலிமை கொண்ட நாடு. தனி நபர் GDP $31,500.

விவசாயத்தில் 2.6% தொழிலாளிகளே ஈடுபட்டாலும், தேவைக்கும் அதிகமாக விவசாயம் செய்யும் நாடு.

கொதிக்கும் பாலைவனம், எப்போதும் பனிமூடிய ஆர்க்டிக் பிரதேசம், மணற்பாங்கான ஹவாய் தீவுகள் என மிக வேறுபட்ட சூழ்நிலைகளைக் கொண்டது.

ஜனத்தொகை 278,058,881 (ஜூலை 2001 மதிப்பீடு)
வயது விகிதம் 0 - 14: 21.12% (ஆண் 30,034,674; பெண் 28,681,253)

15 - 64: 66.27% (ஆண் 91,371,753; பெண் 92,907,199)

65க்கு மேல்: 12.61% (ஆண் 14,608,948; பெண் 20,455,054) (2001 மதிப்பீடு)
மக்கள் பெருக்கம் 0.9% (2001 மதிப்பீடு)
பிறப்பு விகிதம் 14.2 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
இறப்பு விகிதம் 8.7 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
குழந்தை இறப்பு 6.76 / 1,000த்திற்கு
சராசரி வாழ்வு 77.26 வருடங்கள்