சீனா - China

சீனா
சீனா நாடல்ல - அது ஒரு தனி உலகம்.

pakistanflag சீனா - புள்ளி
விபரங்கள்:

அதிகாரபூர்வ பெயர் மக்களின் சீன குடியரசு
People's Republic of China
இருக்குமிடம் கிழக்கு ஆசியா, கிழக்கு சீனகடலின் எல்லை, மஞ்சள் கடல், தென் சீனகடல், வடகொரியா, வியட்நாம்
பூகோள குறியீடு 35 00 வடக்கு, 105 00 கிழக்கு
மொத்தப் பரப்பு 9,596,960 சதுர கி.மீ.
மொத்த நிலம் 9,326,410 சதுர கி.மீ.
கடற்கரை 270,550 சதுர கி.மீ.
பணம் (கரன்சி) யுவான் (CNY)
அண்டை நாடுகள் (எல்லை) ஆஃப்கானிஸ்தான் 76 கி.மீ., பூடான் 470 கி.மீ., பர்மா 2,185 கி.மீ., ஹாங்காங் 30 கி.மீ., இந்தியா 3,380 கி.மீ., கஸகஸ்தான் 1,533 கி.மீ., வடகொரியா 1,416 கி.மீ., லாஸ் 423 கி.மீ., மங்கோலியா 4,676 கி.மீ., நேபாள் 1,236 கி.மீ., பாகிஸ்தான் 523 கி.மீ., ரஷ்யா (வடகிழக்கு) 3,605 கி.மீ., ரஷ்யா (வடமேற்கு) 40 கி.மீ., தாஜிகிஸ்தான் 414 கி.மீ., வியட்நாம் 1,281 கி.மீ.
தலைநகர் பெய்ஜிங்

சில துளிகள்:

சீனா நாடல்ல - அது ஒரு தனி உலகம். எங்கு பார்த்தாலும் கடைகளும் நாகரிகமும் நிறைந்த பெருநகரங்கள், மங்கோலிய காவிய புல்வெளிகள், பாலைவனங்கள், புனித மலைமுகடுகள், பிரமிப்பூட்டும் குகைகள், மன்னர் கால இடிபாடுகள். இது நிலப்பரப்பிலும் பண்பாட்டிலும் பல்வேறு வகைகளைக் கொண்ட நிலம். சீனா மாவோயிஸத்திலிருந்து முற்றிலும் விடுபடவில்லை. பழங்கால கம்யூனிஸவாதிகள் பொருளாதார யதார்த்தவாதிகளாகவும் தற்போது மாறியிருக்கிறார்கள், தங்கள் கொள்கைகளையும் நடைமுறைகளையும் முற்றிலும் விட்டு விலகாமலேயே.

இந்தியாவைப் போலவே சீனாவும் பல்வேறு ஆச்சரியங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அளவிலும் மக்கள் தொகையிலும் இந்தியாவை விட பெரிய நாடு கூட. ஐரோப்பியா காட்டுமிராண்டிகள் நிறைந்த நிலமாக இருந்த போதே இந்தியாவைப் போலவே சிறந்த நாகரிகமும் ஆன்மிகமும் கொண்டிருந்த நாடு. மிகப் பழங்காலத்திலேயே நாற்காலியில் அமர்ந்து மேஜையில் உணவை வைத்து கைகளால் தொடாமல் (கு ச்சிகளை உபயோகித்து) உண்ணும் நாகரிகத்தை உலகில் முதன்முதலாக கொண்ட நாடு. இந்தியாவைப் போலவே இங்கும் முற்றிலும் மாறுபட்ட பல சுற்றுப்பயணத் திட்டங்களில் நீங்கள் விரும்பியவற்றைத் தொடரலாம்.

சிறந்த காலம்:

மார்ச் - ஏப்ரல் மற்றும் செப்டம்பர் - அக்டோபர் மாதங்கள் சீனச்சுற்றுலாவிற்கு சிறந்தது. பகல் பொழுதில் 20 முதல் 30 டிகிரி செல்சியஸ் இருக்கும், ஆனால் இரவில் நடுங்கும் குளிர். சீன புத்தாண்டு போன்ற முக்கிய பண்டிகைகளை தவிர்ப்பது நல்லது. இந்தச் சமயங்களில் தங்கும் அறை கிடைப்பதும் பயணம் செய்வதும் கடினம்.

விழா காலங்கள்:

சீன புத்தாண்டு:

பெரும்பாலும் பிப்ரவரியில் வரும். அதிகாரபூர்வமாக மூன்று நாள் நீடிக்கும், ஆனால் பெரும்பாலோர் ஒரு வாரம் விடுப்பில் இருப்பர். காதைப் பிளக்கும் பட்டாசு சப்தங்களும், கண்ணை பறிக்கும் வாண வேடிக்கைகளும் தவிர்க்க முடியாதவை. ஹோட்டல் அறைகளின் வாடகை விண்ணை முட்டும்.

லாந்தர் பண்டிகை:

இது பொது விடுமுறையல்ல. ஆனால் வண்ணமயமானது. முதல் பௌர்ணமியிலிருந்து 15 நாட்கள் கழித்து வரும். இது புத்தாண்டு கொண்டாட்டத்தின் முடிவைக் குறிக்கிறது. பிரபலமான சிங்க நடனம் இந்தக் காலங்களில் நடைபெறும்.

சிங் மிங்:

ஏப்ரலில் நடக்கும் சீனக் குடும்பங்கள் மறைந்த தங்கள் உறவினர்களின் கல்லறையைச் சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி.

டிராகன் படகு திருவிழா:

ஜூன் மாதத்தில் ஹாங்காங்கில் நடப்பது. வுட் யுவான் என்ற கவிஞரை கௌரவிக்கும் முகமாக இந்தத் திருவிழா நடைபெறும். பலர் சேர்ந்து ஒரே சமயத்தில் துடுப்பை வீசி செலுத்தும் நீளமான படகுகளின் போட்டி மிகப் பிரபலமான ஒன்று. பல வெளிநாட்டுக் குழுக்களும் பங்கு பெறும்.

ஜனத்தொகை 1,273,111,290 (ஜூலை 2001 மதிப்பீடு)
வயது விகிதம் 0 ଭ 14: 25.01% (ஆண் 166,754,893; பெண் 151,598,117)

15 ଭ 64: 67.88% (ஆண் 445,222,858; பெண் 418,959,646)

65க்கு மேல்: 7.11% (ஆண் 42,547,296; பெண் 48,028,480) (2001 மதிப்பீடு)
மக்கள் பெருக்கம் 0.88% (2001 மதிப்பீடு)
பிறப்பு விகிதம் 15.95 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
இறப்பு விகிதம் 6.74 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
குழந்தை இறப்பு 28.08 / 1,000த்திற்கு
சராசரி வாழ்வு 71.62 வருடங்கள்