மியான்மர் (பர்மா) - Myanmar

மியான்மர் (பர்மா)
இரும்புத் திரை. முன்பு தமிழர்கள் அதிகம் வாழ்ந்த நாடு.

 myanmarflag மியான்மர் - புள்ளி விபரங்கள்:

அதிகாரபூர்வ பெயர் பர்மா யூனியன்
Union of Burma
இருக்குமிடம் தென்கிழக்கு ஆசியா, அந்தமான் கடலின் எல்லை, வங்காள விரிகுடா, பங்களாதேஷ், தாய்லாந்து
பூகோள குறியீடு 22 00 வடக்கு, 98 00 கிழக்கு
மொத்தப் பரப்பு 678,500 சதுர கி.மீ.
மொத்த நிலம் 657,740 சதுர கி.மீ.
கடற்கரை 20,760 சதுர கி.மீ.
பணம் (கரன்சி) க்யாட் (MMK)
அண்டை நாடுகள் (எல்லை) பங்களாதேஷ் 193 கி.மீ., சீனா 2,185 கி.மீ., இந்தியா 1,463 கி.மீ., லாஸ் 235 கி.மீ., தாய்லாந்து 1,800 கி.மீ.
தலைநகர் ரங்கூன்

சில துளிகள்:

இன்றைய இரும்புத் திரை நாடு. 1989ம் ஆண் டு பர்மா என்ற நாட்டின் பெயரை
மியான்மார் நைங்கண்டாவ் (அல்லது Union of Myanmar) என்று மாற்றினர். தலைநகர் ரங்கூன், யாங்கோன்
எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

12,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் இங்கு வாழ்ந்தனர். ஆனால் அரசாட்சி கி.மு. முதல் நூற்றாண்டில்
தான் தொடங்கியது என நம்பப்படுகிறது. சுமார் 130 இனங்கள் வாழ்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளும்
வட்டார வழக்குகளும் உள்ளன. அரசு மொழி: பர்மீஸ்.

பல்லாயிரக்கணக்கான புத்த கோயில்கள் நாடு முழுவதும் பரவியிருப்பதால், இது 'Land of Pagodas' என்றும்
வழங்கப்படுகிறது. யாங்கோனில் உள்ள தங்கத்தால் வேயப்பட்ட "ஷ்வே டகோன் பகோடா" மிகவும் புகழ்
பெற்றது. மாண்டலேயில் உள்ள குத்தோடாவ் பகோடாவில் உலகின் மிகப் பெரியப் புத்தகம் (729 பளிங்குப்
பலகைகளால் ஆனது) உள்ளது.

பெருந்தொழில்கள் எல்லாம் அரசின் கையில். விவசாயம், சிறுதொழில்கள், போக்குவரத்து போன்றவை
தனியார் வசம்.

தொழிலாளிகளில் 67.4% பேர் விவசாயத்தில். ஐராவதி நதி படுகையில் உலகின் வளமான நெல் விளை
நிலங்கள் உள்ளன.

நவரத்தின வளங்கள் நிறைந்த நாடு.

தமிழர்கள் முன்பு அதிக அளவில் வாழ்ந்தனர்.

ஜனத்தொகை 41,994,678 (ஜூலை 2001 மதிப்பீடு)
வயது விகிதம் 0 - 14: 29.14% (ஆண் 6,245,798; பெண் 5,992,074)

15 - 64: 66.08% (ஆண் 13,779,571; பெண் 13,970,707)

65க்கு மேல்: 4.78% (ஆண் 895,554; பெண் 1,110,974) (2001 மதிப்பீடு)
மக்கள் பெருக்கம் 0.6% (2001 மதிப்பீடு)
பிறப்பு விகிதம் 20.13 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
இறப்பு விகிதம் 12.3 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
குழந்தை இறப்பு 73.71 / 1,000த்திற்கு
சராசரி வாழ்வு 55.16 வருடங்கள்