ஸ்ரீலங்கா (இலங்கை) - Srilanka
ஸ்ரீலங்கா (இலங்கை)
தெற்காசியாவின் சிறந்த GNP வருமானம். குறைந்த இறப்புவிகிதம். இனக்கலவரம் மட்டும் இல்லாவிட்டால் மிக விரைவில் முன்னேறிய நாடாகும் வாய்ப்பு.
ஸ்ரீலங்கா (இலங்கை) - விபரங்கள்:
| அதிகாரபூர்வ பெயர் | இலங்கை குடியரசு Democratic Socialist Republic of Sri Lanka |
| இருக்குமிடம் | தெற்கு ஆசியா, இந்திய பெருங்கடலில் உள்ள தீவு, இந்தியாவின் தெற்கு பகுதி |
| பூகோள குறியீடு | 7 00 வடக்கு, 81 00 கிழக்கு |
| மொத்தப் பரப்பு | 65,610 சதுர கீ.மீ. |
| மொத்த நிலம் | 64,740 சதுர கீ.மீ. |
| கடற்கரை | 870 சதுர கீ.மீ. |
| பணம் (கரன்சி) | ஸ்ரீலங்கா ருபி (LKR) |
| அண்டை நாடுகள் (எல்லை) | |
| தலைநகர் | கொழும்பு |
இலங்கையின் (முன்னாள் சிலோன்) அதிகாரபூர்வ பெயர் - ஸ்ரீலங்கா ஜனநாயக சோஷலிச குடியரசு.
1977ல் இலங்கை தன்னிறைவுத் திட்டங்களை கைவிட்டு பொருளாதார மயமாக்கல், ஏற்றுமதி சாரந்த திட்டங்களை பின்பற்ற தொடங்கியது.
தெற்காசியாவிலேயே அதிகமான GNP வருமானம் , அதிக அளவு படித்த மக்கள்தொகை (87%), குறைந்த குழந்தை இறப்புவிகிதம் கொண்டது.
இனக்கலவரம் மட்டும் இல்லாவிட்டால் விரைவில் முன்னேறிய நாடாகும் வாய்ப்பு அதிகம்.
ஏராளமான அரிய மூலிகைகள், கடற்பாசிகள். அதிகம் மாசுபடாத இயற்கை வளங்கள்.
| ஜனத்தொகை | 19,408,635 (ஜூலை 2001 மதிப்பீடு) |
| வயது விகிதம் | 0 - 14: 25.99% (ஆண் 2,578,618; ஆண் 2,464,928) 15 - 64: 67.39% (ஆண் 6,369,881; பெண் 6,708,852) |
| மக்கள் பெருக்கம் | 0.87% (2001 மதிப்பீடு) |
| பிறப்பு விகிதம் | 16.58 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு) |
| இறப்பு விகிதம் | 6.43 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு) |
| குழந்தை இறப்பு | 16.08 / 1,000த்திற்கு |
| சராசரி வாழ்வு | 72.09 வருடங்கள் |
