ஆஸ்திரேலியா - Austrialia

ஆஸ்திரேலியா
ஒரு கண்டம் - ஒரு நாடு. பரப்பளவு இந்தியாவை விட இரு மடங்கு பெரியது. மக்கள்தொகை இரண்டே கோடி.

australiaflag ஆஸ்திரேலியா - புள்ளி விபரங்கள்:

அதிகாரபூர்வ பெயர் காமன்வெல்த் ஆஃப் ஆஸ்திரேலியா
Commonwealth of Australia
இருக்குமிடம் ஓசியானியா, இந்திய மகா சமுத்திரம் மற்றும் தெற்கு பசுபிக் சமுத்திரம்
பூகோள குறியீடு 27 00 தெற்கு, 133 00 கிழக்கு
மொத்தப் பரப்பு 7,686,850 சதுர கி.மீ.
மொத்த நிலம் 7,617,930 சதுர கி.மீ.
கடற்கரை 68,920 சதுர கி.மீ.
பணம் (கரன்சி) ஆஸ்திரேலியன் டாலர் (AUD)
அண்டை நாடுகள் (எல்லை)  
தலைநகர் கான்பெர்ரா

சில துளிகள்:

ஆஸ்திரேலிய கண்டம் முழுவதும் ஒரே நாடு. எந்த நாட்டுடனும் நில எல்லை கிடையாது.

ஆதிவாசி இனங்கள் சுமார் 40,000 வருடங்களுக்கு முன்பிருந்து வசிக்கிறார்கள்.

கற்காலத்திற்கு முன்பிருந்து மனிதர்கள் வசித்தாலும் அவர்கள் இந்தோனேஷியத் தீவுகளிலிருந்து வந்தவர்களாகத் தான் நம்பப்படுகிறது.

பரப்பளவில் ஆறாவது பெரிய நாடு. ஆனால் மக்கள் தொகை வெறும் 2 கோடி.

மேற்கத்திய பொருளாதாரமுறைகளைப் பின்பற்றுகிறார்கள். தனி நபர் GDP வலுவான பொருளாதார நாடுகளுக்கு இணையானது.

தொழிலாளிகளில் 5% மட்டும் விவசாயத்தில்.

எண்ணெய் வளமும், கனிம வளமும் மிகுந்த நாடு.

ஜனத்தொகை 19,357,594 (ஜூலை 2001 மதிப்பீடு)
வயது விகிதம் 0 - 14: 20.64% (ஆண் 2,045,892; பெண் 1,948,949)

15 - 64: 66.86% (ஆண் 6,538,096; பெண் 6,405,014)

65க்கு மேல்: 12.5% (ஆண் 1,059,107; பெண் 1,360,536)
மக்கள் பெருக்கம் 0.99% (2001 மதிப்பீடு)
பிறப்பு விகிதம் 12.86 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
இறப்பு விகிதம் 7.18 / 1,000த் திற்கு (2001 மதிப்பீடு)
குழந்தை இறப்பு 4.97 / 1,000த்திற்கு
சராசரி வாழ்வு 79.87 வருடங்கள்