ரக்ஷா பந்தன் - Raksha Bandhan

ரக்ஷா பந்தன்
ராக்கி கட்டுதல் என்றால் பெரும்பாலோருக்கு விளங்கும்.

ராக்கி கட்டுதல் என்றால் பெரும்பாலோருக்கு விளங்கும். பெண்கள் தனது சகோதரர்களின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டும் நிகழ்ச்சி. இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஒரு ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுகிறான். ராக்கி கட்டிய உடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு ஒரு பரிசு (அல்லது பணம்) அளிப்பது வழக்கம்.

வட இந்தியாவில் பிரபலமாக உள்ள இந்த நிகழ்ச்சி தற்போது தென்னிந்தியாவிலும் பாஷனாகி விட்டது. கலர் கலரான ராக்கிகள், தென்னிந்தியாவில் சின்னச் சின்ன கடைகளில் கூட தொங்குகிறது. மாணவிகள், இளைஞிகள் தங்கள் நண்பர்கள், அறிமுகமானவர்களுக்கு ராக்கி கட்டுவதும். பஸ் ஸ்டாண்ட் ஜொள்ளர்கள் அந்தத் தினத்தில் காணாமல்(!) போய் விடுவதும் சகஜமாகி வருகிறது.

தங்கள் சகோதர அன்பை வெளிக்காட்டும் நிகழ்ச்சியாக இது பழங்காலந்தொட்டு வழக்கில் இருந்து வருகிறது. கி.பி. 1303ம் ஆண்டு சித்தூர்கரை (ராஜஸ்தானில்) டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி தாக்க வரும் போது, ராணி பத்மினி அண்டை நாட்டு மன்னர்களுக்கு ராக்கி அனுப்பியதாக சரித்திரக் குறிப்புகள் உள்ளன. இதன் மூலம் தன் சகோதரியைக் காக்க அந்த மன்னர்கள் தங்கள் படைகளை அனுப்ப நிர்பந்தித்ததாக கூறப்படுகிறது.

இது மதப் பண்டிகை என்பதை விட சமுதாய பண்டிகை என்று கூறுவது தான் சரியானது.