சாளுக்கிய சோழர் - Chalukya Chola Kings

சாளுக்கிய சோழர்
ஆட்சிக் கால விபரங்கள்.

சோழர்கள் கிழக்கத்திய சாளூக்கியர்களுடன் கொண்ட திருமண பந்தங்கள், சோழர்கள் ஆட்சி வலிமையை திரும்ப பெற உதவியது.
முதலாம் குலோத்துங்கன் தூரக் கிழக்கு நாடுகளுக்கும் சீனாவிற்கும் சென்று நட்பு கொண்டதாகக் கூறப்படுகிறது. தனது குடிமக்களின் நலனில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டான். இதனாலேயே பெரும்புகழும் அடைந்தான். பாண்டியர்களின் வலிமையைக் குறைத்து, விழினம், சாலை, வேங்கி, கலிங்கம் ஆகியவற்றைக் கைப்பற்றினாலும், இலங்கையும் கங்காவடியும் சோழர் பிடியிலிருந்து விடுபட்டது.

காலம் (A.D.) மன்னர்கள்
1071-1122 குலோத்துங்கன் I
1122-35 விக்ரம சோழன்
1135-50 குலோத்துங்கன் II
1150-73 ராஜராஜன் II
1163-66-78/79 ராஜாதிராஜன் II
1178-1217 குலோத்துங்கன் III
1216-60 ராஜராஜன் III
1246-79 ராஜேந்திரன் III

குலோத்துங்கனைத் தொடர்ந்து விக்ரமச் சோழனும் குடிமக்கள் நலனில் அதிக அக்கறை கொண்டான். அதிகாரத்தை
தன்னிடமே குவித்துக் கொள்ளாமல் பரவலாக்கினான். பாண்டிய, பல்லவ சிற்றரசர்கள் பலம் பெறத் துவங்கினர்.

இரண்டாம் ராஜராஜனும், இரண்டாம் குலோத்துங்கனும் நிலையான அமைதியான ஆட்சி செய்தார்கள். பாண்டிய நாட்டில்
உள்நாட்டுக் கலகங்கள் பெரிய அளவில் தோன்ற ஆரம்பித்தன. மூன்றாம் குலோத்துங்கன் பாண்டிய நாட்டு கலகத்தை அடக்கி விக்ரம பாண்டியனை மதுரையில் அரியனையில் அமர்த்தினான். தொடர்ந்து காஞ்சியையும் கொங்கு நாட்டையும் வென்றான்.

சோழர்-பாண்டியர் உரசல்கள் பாண்டியர்களுக்கு உதவிகரமாக அமைந்தன. பாண்டியர்கள் பலம் பெறத் துவங்கினர்.

தொடர்ந்து கி.பி.590 முதல்   பாண்டியர்கள் - I....