பிலிமின் வேகம் எவ்வளவு? - Film Speeds

பிலிமின் வேகம் எவ்வளவு?
பிலிம் ஸ்பீடு எந்த அளவுக்கு முக்கியம். அதை எப்போழுது கருத்தில் கொள்ள வேண்டும்.

பெரும்பாலோர் கேமராவில் பிலிம் போட வேண்டுமென்றால் அருகிலிருக்கும் ஸ்டோரில் 'பிலிம் ரோல்' வாங்கி மாட்டி படம் எடுக்கத் தொடங்கி விடுவார்கள். இப்படி பொதுவாக 'பிலிம் ரோல்' என்று வாங்கப்படும் பிலிம் ISO-200 என்ற வேகம் கொண்டதாக இருக்கும். ISO-200 என்பது தரமான, சாதாரண தேவைகளுகேற்ற வேகம் தான், ஆனால் அதுவே எல்லா சமயங்களிலும் ஒத்து வராது.

வேகக்குறியீடு:
எல்லா பிலிம் ரோல்களிலும் அதன் வேகம் கண்டிப்ப ଡ଼'அ3க குறிக்கப்பட்டிருக்கும். International Standards Organization என்பதன் சுருக்கமே ISO. இதன் வேகம் 100, 200, 400 என்று கூடிக்கொண்டே செல்லும் (அதாவது முந்தைய வேகத்தை விட இரட்டிப்பாக). 100க்கும் கீழே வேகங்கள் உண்டு, ஆனால் எளிதில் கிடைப்பதில்லை. அதே போல் தான் 400க்கு மேலாகவும்.

ISO-100-ஐ விட ISO-200 இருமடங்கு வேகமாக வெளிச்சத்திற்கு மாறுபாடு அடையும். ஆகவே 100-ஐ விட 200க்கு குறைந்த நேரம் அல்லது குறைந்த வெளிச்சம் போதும். படங்களை கேபினட் அளவுக்கு மேல் பெரிதாக்கும் போது அதிக வேகம் கொண்ட பிலிமில் எடுத்த படங்களை விட குறைந்த வேகத்தில் எடுத்த படங்கள் தெளிவாகவும், துகள்கள் (grains) இல்லாமலும் இருக்கும்.

எப்படித் தேர்ந்தெடுப்பது?:
சரியான பிலிம் வேகத்தை தேர்ந்தெடுக்க, பல விபரங்களை மனதில் கொள்ள வேண்டும்.

முதலாவது - நீங்கள் எடுக்கப் போகும் உருவம் நிலையானதா, அசையக்கூடியதா என்பது. ஒரு நாட்டிய நிகழ்ச்சி, அல்லது பந்தயம் போன்ற வேகமான அசைவுகளைப் படம் பிடிக்க வேண்டியிருந்தால் வேகமான பிலிம் அவசியம். இல்லாவிட்டால் கைகள் போன்ற அசையும் பகுதிகள் தெளிவில்லாமல் தீற்றலாகத் தெரியும்.

இரண்டாவது - படம் எடுக்குமிடத்தில் எவ்வளவு வெளிச்சம் கிடைக்கும் என்பது. வெளிச்சம் குறைவாக உள்ள பார்ட்டி போன்ற நிகழ்ச்சி என்றால் குறைந்த வேகம் உள்ள பிலிம் சிறந்தது.

பல்வேறு சூழ்நிலைகளில் கலவையாக எடுக்கப் போகிறேன் என்றால் பொதுவான ISO-200 சரியாக இருக்கும். ஆனால் 'ஆக்ஷன்' படங்கள் சிறிது தீற்றலாகவும், குறைந்த ஒளியில் எடுக்கும் படங்கள் இருட்டாகவும் இருக்குமென்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.