ஆந்த்ராக்ஸ்- Anthrax

ஆந்த்ராக்ஸ்
கிருமிகள் பரவும் முறை. விலங்குகள், மனிதர்களில் பாதிப்புகள்.

ஆந்த்ராக்ஸ் என்றால் என்ன?
ஆந்த்ராக்ஸ் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் ஏற்படக்கூடிய ஒரு நோய். இது 'பாசில்லஸ் ஆந்த்ராக்ஸ்' எனும் பாக்டீரியாவினால் ஏற்படுகிறது. இது கால்நடைகளுக்கும், தாவரங்களை உண்டு வாழும் பாலூட்டிகளுக்கும் மட்டுமே ஏற்படக்கூடியது. நோயுற்ற விலங்குகளை கையாளும் மனிதர்களுக்கு இந்நோய் வர வாய்ப்புண்டு. இது ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் பரவலாகக் காணப் படும்.

ஆனால் இது எளிதில் பரவக்கூடிய நோய் அல்ல. காற்றின் மூலம் தானாக பரவுவது இல்லை. மேலும் ஒரு மனிதனிடமிருந்து மற்றவருக்குப் பரவுவதும் இல்லை. தடுப்பூசி மூலம் நோய் ஏற்படாமல் தடுக்கலாம். நோய் ஏற்பட்ட ஆரம்ப கட்டத்தில் மருந்துகள் மூலம் எளிதில் குணப்படுத்தலாம்.

தற்போது 'பயலாஜிகல் போர்முறை' எனும் நோய்க் கிருமிகளை ஏவி எதிரி நாடுகளைத் தாக்கும் முறையில் இந்த ஆந்த்ராக்ஸ் கிருமிகளின் பயன்பாட்டைப் பற்றி பல நாடுகளும் ஆராய்ச்சி செய்து வருகின்றன.

ஆந்த்ராக்ஸ் கிருமிகள் வாழும் விதம்:
இது மண்ணில் பல நூற்றாண்டுகளாகக் கூட அழியாமல் நுண்ணிய பூஞ்சை கூடு கட்டி வாழக் கூடியது. இந்த கூடுகளை ஒரு வித திரவ முலாம் பூசுவதால் மிக அதிக வெப்பத்தையும் தாங்கிக் கொள்ளும்.

விலங்குகளில் ஆந்த்ராக்ஸ்:
ஆந்த்ராக்ஸ் பூஞ்சைக் கூடுகள் உள்ள மண்ணில் வடிந்து வந்த நீரைக் குடிக்கும் விலங்குகளுக்கு இந்த நோய் பரவுகிறது. நோயுற்று இறந்த விலங்கை உண்ணுவதாலும், இரத்தம் உறிஞ்சும் பூச்சிகளின் கடியாலும் இது மற்ற விலங்குகளுக்கும் பரவுகிறது.

நோயுற்ற விலங்குகளுக்கு தடுமாற்றம், இரத்தப் போக்கு, வலிப்பு, மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்பட்டு உடனடியாக இறக்கவும் வாய்ப்புண்டு. தடுப்பூசி மூலமும், நோய் ஏற்பட்டவுடன் மருந்துகள் மூலமாகவும் விலங்குகளைக் காப்பாற்ற முடியும்.

மனிதர்களில் ஆந்த்ராக்ஸ்:
மனிதர்களில் இந்த நோய் மூன்று விதங்களில் தோன்றக் கூடியது. தோல் வியாதி, நுரையீரல் பாதிப்பு, குடல் பாதிப்பு.

இதில் தோல் வியாதி, உடலில் காயங்கள், வெடிப்புகளில் நேரடியாக கிருமிகள் பட்டால் மட்டுமே ஏற்படக் கூடியது. பாதிக்கப்பட்ட விலங்குகளின் தோல்கள், உரோமங்கள் (wool), மாமிசத்தைக் கையாளுபவர்களுக்கு வரக்கூடியது. தோலில் கருமையான கொப்புளங்கள் ஏற்பட்டு, முற்றிய நிலையில் வெடித்து நடுவில் கருநிறம் கொண்டதாக இருக்கும். இவைகளை மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம். மருத்துவப் பராமரிப்பில் இல்லாதவர்களில் சுமார் 20 சதவீதம் வரை இறப்பு ஏற்படுகிறது.

சுவாசம் மூலமாக கிருமிகள் நுரையீரலை அடைந்தால் ஏற்படும் பாதிப்பு தான் சற்று அபாயகரமானது. இவ்வகை பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு ஆரம்ப அறிகுறிகள் சளி அல்லது ப்ளு பாதிப்பை போன்று - உடல் வலி, காய்ச்சல், அசதி, இருமல் அல்லது இலேசான நெஞ்சுவலி ஆகியவை தென்படும். பாதிக்கப்பட்டவருக்கு தடுப்பூசி அல்லது மருந்துகள் உடனடியாக அளிக்கப்படாவிட்டால் இறந்துவிட வாய்ப்புகள் அதிகம். ஆனால் இதற்கு தேவைப்படும் 'Ciproflaxacian', 'Pencillin' போன்ற மருந்துகள் நாம் பொது மருத்துவத்திலேயே அதிகம் பயன்படுத்துவதால் எளிதில் கிடைக்கக் கூடியது.

பாதிக்கப்பட்டு இறந்த விலங்குகளை உண்பதால் குடல் பாதிப்பு ஏற்படும். இவ்வகையில் வாந்தி, தலைசுற்றல், வயிற்று வலி, கடுமையான பேதி ஆகியவை ஏற்படலாம். இவ்வகை பாதிப்பில் சுமார் 20 முதல் 60 சதம் வரை இறப்பில் முடிகிறது.

'தபால் மூலம் ஆந்த்ராக்ஸ்' - பாதுகாப்பு முறைகள்:
பயங்கரவாதிகளால் அனுப்பப்படும் கடிதத்தைப் பெற நேர்ந்தால் கையாள வேண்டிய அணுகு முறைகள்.
ஆந்த்ராக்ஸ் - வரலாறு:
பழங்காலம் முதல் தற்கால உயிரியல் ஆயுதம் வரை
Top மேலேGo Top