தொடர்ந்து புகைக்க ஆசை வருவதேன்?- Smoking Addiction

தொடர்ந்து புகைக்க ஆசை வருவதேன்?
மூளையில் நிகோட்டினின் செயல்கள்.

இது நிகோட்டினின் வேலை தான். நிகோட்டின் முதலில் மூளையில் உள்ள செல்களைத் தூண்டி விட்டு உடலுக்குள் வேகமூட்டுகிறது. பின்னர் தொடர்ந்த உபயோகத்தால் செயல்திறன் இழந்த நிலைக்குக் கொண்டு செல்கிறது (மதுவைப் போல).


இங்கு மூளையின் ஒரு நரம்புப் பகுதியைப் பற்றி கூற வேண்டும். உதாரணமாக பசி உணர்வு நம் உடல் தேவையை நமக்கு தெரிவிக்கிறது. பசிக்கும் போது உணவு உண்டு முடித்தால் ஒரு நிறைவு உணர்வு உண்டாகிறது. இந்த நிறைவு உணர்வு ஒரு சுகமான, இதமான உணர்வாக இருப்பதால் தேவையில்லா விட்டாலும் (பசி தீர்ந்த பின்னும்) தொடர்ந்து சாப்பிடும் விருப்பம் ஏற்படுகிறது.


மூளையில் இந்த சுகமான உணர்வை ஏற்படுத்தும் பகுதிக்கு செல்லும் 'டொபாமைன்' (Dophamine) எனும் நியூரான்களை நிகோட்டின் அதிக அளவில் செயல்படுத்த வைக்கிறது. இதனால் 'கோகெய்ன்' மற்றும் 'நிகோட்டின்' உபயோகிப்பவர்களுக்கு அது உடலுக்கு தீங்கானது என்று தெரிந்தாலும் தொடர்ந்து உபயோகிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துகிறது.


முந்தைய பக்கங்கள்:

புகைப் பழக்கம்: நிகோட்டின் என்றால் என்ன?

புகைபிடித்தால் நுரையீரலில் என்ன நடக்கிறது?