மூலிகைப் பட்டியல் - I-List of Herbs - I

மூலிகைப் பட்டியல் - I
பாரம்பரியமாகக் கண்டறியப்பட்ட சில பொதுவான மூலிகைகளின் பட்டியல், பாகம் - I.

பாரம்பரியமாகக் கண்டறியப்பட்ட சில பொதுவான மூலிகைகளின் பட்டியல் கீழே உள்ளது. அந்த பெயர்களை 'க்ளிக்' செய்வதன் மூலம் அவற்றைப் பற்றிய விபரங்களைக் காணலாம்.


அதிமதுரம் அமுக்காரக் கிழங்கு அசோகு

அம்மான் பச்சரிசி
அருகம்புல் அரிவாள்மனை பூண்டு

அவுரி
ஆடாதோடை ஆடுதீண்டாபாளை

ஆரை
ஆவாரை
இஞ்சி

இம்பூரல்
உத்தாமணி
உத்திராட்சம்

ஊமத்தை
எருக்கன்
எள்

ஏலக்காய்
ஓதியன்
ஓமம்

ஓரிதழ் தாமரை
   

அடுத்தது:

பொதுவான மூலிகைகளின் பட்டியல்: பாகம் - II. .

மூலிகை விபரங்கள்:

01:அதிமதுரம்

Glycyrhiza Glabra

தீரும் நோய்கள்: இருமல், வயிற்றுப்புண், பசியின்மை, சுவையின்மை, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்.


02:அமுக்கராக் கிழங்கு

Withania Somnifera

உடல் எடை அதிகரிக்க, உடல் அசதி, மூட்டுவலி, தூக்கமின்மை.

03:அசோகு

Saraca Indica

கருப்பை நோய்கள், சூதக வலி, மாதவிடாய் போக்கு, வெள்ளைப்படுதல்.


04:அம்மான் பச்சரிசி

Euphorbia Hirta

முகப்பரு, முகத்தில் எண்ணெய்ப் பசை, கால் ஆணி, பித்த வெடிப்பு, இரைப்பு, தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க.

05:அருகம்புல்

Cynodon Dactylon

இரத்தம் சுத்தமாக, வியர்வை நாற்றம், உடல் அரிப்பு, நமைச்சல், வெள்ளைப்படுதல்.

Top   மேலேGo Top

06:அரிவாள்மனை பூண்டு

Sida Acuta

காயங்கள், புண்களுக்கு களிம்பு செய்து பூச.


07:அவுரி

Indigofera Tinctoria

பாம்புக்கடிக்கு முதலுதவி, காமாலை, தோல் நோய்கள், ஒவ்வாமை (அலர்ஜி).


08:ஆடாதோடை

Adhatoda Zeylanica

சளி, இருமல், தொண்டைக் கட்டு.

09:ஆடுதீண்டாபாளை

Aristolochia Bracteolata

தோல் நோய்கள், சிரங்கு, கரப்பான், வண்டுக்கடி ஆகியவைகளுக்கு மேல் பூச்சு.

10:ஆரை

Marselia Quadrifida

சிறுநீர்க்கட்டு, சிறுநீர் எரிச்சல்.
Top   மேலேGo Top

11:ஆவாரை

Cassia Auriculata

நீரிழிவு, மேக நோய்கள், நீர்கடுப்பு, உள்ளங் கால் எரிச்சல், சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல்.


12:இஞ்சி

Zingiber Officinale

பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டைக் கம்மல்.

13:இம்பூரல்

Oldenlandia Umbellata

இரத்த வாந்தி, மாதவிடாய் போக்கு கட்டுபடுத்த.

14:உத்தாமணி (வேலிப்பருத்தி)

Pergularia Daemia

குழந்தைகளுக்கு செரியாமை (அஜீரணம்), மாந்தம், வயிற்றுப் பொருமல் ஆகியவைகளுக்கு.


15:உத்திராட்சம்

Elaeocarpus Scarius

குழந்தைகளுக்கு தொண்டைக்கட்டு, இடைவிடாத விக்கல், கோழை.


Top   மேலேGo Top


16:ஊமத்தை

Datura Metel

புண்களுக்கு வெளிப்பூச்சு மட்டும்.


17:எருக்கன்

Calotropis Gigantea

தேள், குளவி, பூச்சிகளின் விஷக்கடி, கட்டிகளுக்கு மேல் பூச்சு.

18:எள்

Sesamum Indicum

உடற்சூடு, தலைப் பாரம் குறைய.


19:ஏலக்காய்

Elettaria Cardamomum

அஜீரணம், குமட்டல், வாந்தி.

20:ஓதியன்

Lannea Coromandelica

வாய்புண், குடல்புண், இரத்தக்கழிச்சல், பேதி.
Top   மேலேGo Top

21:ஓமம்

Carum Roxburghianum

மூக்கடைப்பு (Running nose), பீனிசம்.


22:ஓரிதழ் தாமரை

Hybanthus Enneaspermus

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வெள்ளைப்படுதல்.