பிரபலமானவர்களிடம் ஆட்டோகிராஃப் பெறும் முறைகள் - Collecting autographs

பிரபலமானவர்களிடம் ஆட்டோகிராஃப் பெறும் முறைகள்
கடிதம் மூலமும், நேரிலும் ஆட்டோகிராஃப் கிடைக்க சில அடிப்படை வழிமுறைகள்.

பிரபலமானவர்களிடம் ஆட்டோகிராஃப் பெறும் முறை: (கடிதம் மூலம்)
சில அடிப்படைகள்:
* எளிமையான கடிதம்.
* எப்பொழுதும் ஒரு கவர் இணைக்கவும் (உங் கள் விலாசம் மற்றும் போதுமான ஸ்டாம்புடன்). பதில் கிடைக்க இது மிக முக்கியமானது.
* உங்களிடம் பிடித்த புகைப்படம் அல்லது அட்டை இருந்தால் அதை அனுப்பி கையெழுத்திட வேண்டலாம், அல்லது கையெழுத்திட்ட புகைப்படம் அனுப்புமாறும் கோரலாம்.
* நீங்கள் அனுப்பும் கடிதக்கவரில் உங்கள் விலாசத்தை எழுதுங்கள்.
* நீங்கள் அனுப்பிய கடிதங்களின் விபரங் களை (யாருக்கு, எந்த தேதியில்) குறித்துக் கொண்டால், எந்தெந்தக் கடிதங்களுக்கு பதில் வந்தது, எவ்வளவு நாட்களானது என்பன போன்ற விபரங்களை அறிய வசதியாக இருக்கும்.

எப்படி கடிதம் எழுதுவது?
* பெரும்பாலும் இதமாகவும், உண்மையாகவும் எழுதினால் நன்று. நீங்கள் கையெழுத்துக் கோரும் நபரை முறையாக உரிய அடைமொழி (திரு, செல்வி, திருமதி, அல்லது மாண்புமிகு போன்றவை) உபயோகித்து குறிப்பிடவும். அவர் அரசுப் பதவி அல்லது பட்டங்கள் பெற்றிருந்தால் அதை பெயருக்கு முன் எழுதவும்.
* நீங்கள் அவருடைய ரசிகர் என்பதைத் தெரியப்படுத்துங்கள். அவருடைய படம் அல்லது விளையாட்டு அல்லது பாடல் போன்றவற்றில் முக்கியமானவற்றைக் குறிப்பிடுங்கள். அவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயத்தைக் குறிப்பிடுங்கள்.
* கையெழுத்தைக் கேட்கும் போது பணிவுடன் துவங்கி, நன்றியுடன் முடிக்கலாம்.
* முக்கியமாக எழுத வேண்டிய விஷயம் எதுவுமில்லாவிட்டால் கடிதத்தை ஒரு பக்கத்திற்குள் முடிப்பது நலம்.
* உங்களது கடிதம் தெளிவாகவும், தனித்து தெரியும்படியும் பார்த்துக் கொள்வது சிறந்தது.

பிரபலமானவர்களிடம் ஆட்டோகிராஃப் பெறும் முறை: (நேரில்)
கையெழுத்திடுவதற்கு ஆட்டோகிராஃப் புத்தகம்/பேப்பர்/ பேட்/பந்து மற்றும் பேனாவையும் நீங்களே தருவது விஷயத்தை எளிதாக்கும். மற்றபடி நீங்கள் உண்மையிலேயே அவரின் ரசிகராக இருந்தால் உங்கள் முகமும் செய்கையுமே அதை வெளிப்படுத்தி விடும். ஆகவே வேறு முக்கிய விதிகள் தேவையில்லை.

யாரைச் சந்தித்தாலும் இனிமையாக பழகுவது எப்போதும் விரும்பத்தக்கது.