ஈமு பறவை - Emu Bird

ஈமு பறவை ஆஸ்திரேலியாவை தாயகமாகக் கொண்டது. இதன் சரியான உச்சரிப்பு "ஈம்யு" என்பதாகும் எனினும் தமிழக வழக்கில் இது 'ஈமு கோழி' என்றே அழைக்கப்படுகிறது. ஒரு ஆள் உயரத்திற்கு மேல் (ஆறரை அடி) சாதாரணமாக வளரும்.

…Emu Birdநெருப்புக் கோழியை விட சற்றே சிறியதான இப்பறவையால் பறக்க இயலாது. ஆனால் நெருப்புக் கோழியைப் போலவே வேகமாக ஓடக் கூடியது. உயரமான கால்கள் காரணமாக அது ஓடும் பொழுது காலடி தடங்களுக்கிடையே 9 அடி வரை இடைவெளி இருக்கும்.

அதன் கால்கள் மிக பலமானது. காலால் தாக்கி இரும்பு வலை வேலியையே கிழித்து விட முடியும். கூர்மையான பார்வையுக் கேட்கும் திறனும் இருப்பதால் மற்ற மிருகங்களையும் ஆபத்தையும் எளிதில் உணர்ந்து விடும்.
…
…பல வகைத் தாவரங்களையும், பூச்சிகளையும் உண்ணும். சில சமயம் உணவில்லாமல் கூட வாரக்கணக்கில் தாக்குப் பிடிக்கும். நீர் கிடைக்கும் பொழுது அதிகமாக அருந்தும், மற்ற சமயங்களில் நீரில்லாமலும் தாக்குப்பிடிக்கும். இப்பறவைகளில் ஆணையும் பெண்ணையும் இனம் பிரித்து அறிவது கடினம்.

Emu Eggsஇதன் முட்டை பச்சை நிறத்தில் பெரியதாக சுமார் 700 கிராம் முதல் 900 கிராம் வரை இருக்கும். முட்டையின் ஓடு சுமார் 1மி.மீ. தடிமன் கொண்டது. முட்டை அடை காப்பதற்காக ஆண் பறவை தரையில் கூடு கட்டும். பின்பு ஆண் பறவை அதிக காலத்திற்கும் பெண் பறவை சில காலத்திற்கும் அடை காக்கும்.
…
ஆஸ்திரேலிய படைச் சின்னத்தில் கங்காரு ஒரு பக்கத்திலும் ஈமு மற்றொரு பக்கத்திலுமாக பொறிக்கப்பட்டுள்ளது. ஈமுவை ஆஸ்திரேலியாவின் தேசிய பறவையாக அறிவிக்கப்படாவிட்டாலும், மக்கள் அவ்வாறே கருதுகின்றனர். பின்னர் இது அமெரிக்காவிற்கு கொண்டு சென்று வளர்க்கப்பட்டது.
…

வியாபார ரீதியாக வளர்ப்பு:

…ஈமுவை அதன் இறைச்சிக்காவும், தோல் மற்றும் எண்ணெய்க்காகவும் வளர்க்கப்படுகிறது. இது குறைந்த கொழுப்பு சத்து கொண்ட இறைச்சியாகும். இதன் எண்ணெயின் பயன்கள் என்று பலவிதமாக கூறப்பட்டாலும், அவை யாவும் விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்படாமவே இருந்து வருகிறது.
…
…தமிழ் நாட்டில் சேலம், ஈரோடு மாவட்டங்களில், வியாபார ரீதியாக வளர்க்க துவங்கினர். ஆனால் ஈமு கோழியை லாபகரமாக வளர்ப்பது குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.