அணு - Atoms

அணு
மிகச் சிறியது, அடங்கா இயக்கம், எங்கும் இருப்பது, உள்ளிருக்கும் சக்தியோ...! சில அடிப்படை விளக்கங்கள்.

Atom
உலகில் உள்ள எல்லாப் பொருள்களும் அணுக்களால் ஆனவையே (நம் உடலும் கூடத்தான்). எல்லாப் பொருள்களிலும் அல்லது தனிமங்களிலும்
(Elements) அணு அதனுடைய அடிப்படை அளவுவாக இருக்கிறது. தனிமங்களை இதைவிட சிறிய அளவாக பிரிக்க முடியாது. அதாவது ஒரு அனுவை எடுத்தால் அது இரும்பு அணுவா, ஆக்ஸிஜன் அணுவா அல்லது ஹைட்ரஜன் அணுவா என கூறமுடியும். அணுவைப் பிரிக்க முடிந்தாலோ அல்லது அணுவின் ஒரு பகுதியை மட்டும் நோக்கினாலோ அதனுடைய இரும்பு, ஆக்ஸிஜன் போன்ற அடையாளங்கள் மறைந்து விடும். சரி, இரும்பு அணுவுக்கும் ஆக்ஸிஜன் அணுவுக்கும் என்ன வித்தியாசம்? அணுவுக்குள் இருக்கும் பொருட்களின் எண்ணிக்கையில் தான் வித்தியாசம், பொருட்களில் வித்தியாசமில்லை.

அணுவுக்குள் என்ன இருக்கிறது:

எல்லா அணுவுக்குள்ளும் இருக்கக்கூடியவை மூன்றே பொருட்கள். 1. எலக்ட்ரான், 2. ப்ரோடான், 3. ந்யூட்ரான் ஆகியவை. இவற்றில்
ப்ரோடானும் ந்யூட்ரானும் அணுவின் மையப்பகுதியில் அணுக்கரு என்றழைக்கப்படும் பகுதியில் இருக்கும். எலக்ட்ரான் அணுக்கருவைச் சுற்றி வந்து
கொண்டிருக்கும். இதில் எலக்ட்ரானும், ப்ரோடானுமே சம அளவான எதிரெதிர் மின்சக்தியைக் கொண்டவை. அணுவில் இவையிரண்டும் சம
அளவில் இருப்பதால் இதன் சக்திகள் ஒன்றையொன்று ஈர்த்து அணுவின் அமைப்பை நிலையானதாக்குகிறது.

ப்ரோடான்: பாஸிடிவ் சக்தி
கொண்டது. அணுவின் மையத்தில் இருக்கும். எடை 1.0073 amu.

எலக்ட்ரான்: நெகடிவ் சக்தி
கொண்டது. அணு மையத்தைச் சுற்றி சுழன்று வரும். ப்ரோடானுக்கு சமமான சக்தி இருந்தாலும், ப்ரோடானை விட இரண்டாயிரம் மடங்கு எடை குறைவானது. எடை 0.000549 amu.

ந்யூட்ரான்: ப்ரோடானும், எலக்ட்ரானும் இணைந்தது. அதனால் மின்சக்தி சமனப்பட்டு சக்தியை வெளிப்படுத்தாமல் இருக்கும். கிட்டதட்ட ப்ரோடானின் எடை 1.0087amu. இது இல்லாமல் ப்ரோடான், எலக்ட்ரான் மட்டும் கொண்ட அணுக்கள் உண்டு.

அணுவின் அளவு:

மிகச் சிறிய அணு. அதாவது ஒரு எலக்ட்ரான், ஒரு ப்ரோடான் கொண்டது ஹைட்ரஜன் அணு. இதன் விட்டம் 5-10(-8) MM.
உருவகப்படுத்தி பார்க்க வேண்டுமானால் 2 கோடி ஹைட்ரஜன் அணுக்களை ஒரு நேர்க்கோட்டில் வைத்தால் ஒரு மில்லிமீட்டர் நீளம் வரும்.

அணு எண்:

அணுவில் உள்ள ப்ரோடான்களின் எண்ணிக்கையைக் குறிக்கும்.


தொடர்புடைய தளங்கள்: (ஆங்கிலத்தில்)

class="vazhi">அணுக்களின் எண் மற்றும் எடை:

அணுக்களின் எண் மற்றும் எடை எவ்வளவு தூரம் மாறுபடும் என்பதை சுட்டிக்காட்டும் பக்கம்.

class="vazhi">அணு அமைப்புகள்:

பல்வேறு கால கட்டங்களில் விஞ்ஞானிகள் வடிவமைத்த அணு அமைப்புகள்