இயற்பியல் 2000 - நோபல் பரிசு - Nobel Prize for 2000

இயற்பியல் 2000 - நோபல் பரிசு
இயற்பியலுக்கான நோபல் பரிசு இவ்வாண்டு 'தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தின் அடிப்படை வேலைகளுக்காக' வழங்கப்படுகிறது. பெற்றவர் யார், என்ன சாதித்தார் - விபரம் உள்ளே.

செய்தி மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் அடிப்படையான வேலைகளுக்காக மூன்று பேர்களுக்கு இவ்வாண்டு ராயல் ஸ்வீடிஷ்
அறிவியல் அகாடமி நோபல் பரிசு வழங்கிக் கௌரவித்துள்ளது.

இதில் இரண்டு பேருக்குக் கூட்டாக ஒரு பாதியும், மூன்றாமவருக்கு ஒரு பாதியுமாக இந்த பரிசு பிரித்து வழங்கப்படுள்ளது.

ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள ஏ.எப். லோப் பிஸியோ-டெக்னிக்கல் பயிற்றகத்தைச் சேர்ந்த திரு.ஜோரஸ்
ஐ.அல்பெரோவ்விற்கும் (Zhores I. Alferov)

ஐக்கிய அமெரிக்காவில் கலிபோர்னியாவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த திரு.ஹெர்பர்ட் க்ரோமருக்கும் (Herbert
Kroemer)

"உயர்வேகம் மற்றும் ஆப்டோ-எலக்ட்ரானிக் ஸில் உபயோகிக்கப்படும் செமிகண்டக்டர் ஹெடிரோஸ்டிரக்சர்களை வடிவமைத்தற்காக"
கூட்டாக ஒரு பாதியும்.

ஐக்கிய அமெரிக்காவில் டெக்ஸாஸில் டல்லாஸ் நகரைச் சேர்ந்த டெக்ஸாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் என்ற தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த
திரு.ஜாக் எஸ்.கில்பி (Jack S. Kilby) என்பவருக்கு

"ஐசி (IC) உருவாக்கத்தில் அவருடைய பங்காற்றத்திற்காக" பரிசின் ஒரு பாதியும் வழங்கப்பட்டுள்ளது.

'இன்றைய தகவல் தொழில் நுட்பத்தின் அடிப்படையான வேலைகளைச் செய்த, அதிலும் குறிப்பாக ஐசிக்கள், வேகமான
ட்ரான்ஸிஸ்டர்கள், லேசர் டையோடுகள் போன்றவற்றை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கு' இந்தப்பரிசினை வழங்குவதாக
அகாடமி குறிப்பிட்டுள்ளது.

கடந்த வருடங்களில் மிகவும் நுண்ணிய பொதுமக்களுக்குத் தொடர்பில்லாத வேலைகளுக்கு பரிசு வழங்கப்பட்டதைப் போலல்லாது
இம்முறை பொதுமக்களுக்கு தினசரி வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வந்த உருவாக்கங்கள் அங்கீகாரம் பெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.
பெரும்பாலான இன்றைய தொழில்நுட்பங்கள் ஜாக் கில்பியின் உருவாக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை தான். நீங்கள் தற்போது
இணையத்தில் இந்தக் கட்டுரையைப் படித்துக் கொண்டிருப்பதற்கு ஜோரஸ் அல்பெரோவ் மற்றும் ஹெர்பர்ட் க்ரோமர் உருவாக்கிய
முன்னேற்றங்களும் ஒரு காரணம்.