உலகக்கோப்பை கால்பந்து - World Cup Soccer

உலகக்கோப்பை கால்பந்து
ஒலிம்பிக்கிற்கு இணையான உலகக்கோப்பையின் விபரங்கள்.

wctrophy
வெற்றியாளர்கள்:

வருடம் இடம் வெற்றி பெற்ற நாடு இரண்டாவது இடம்
1930 உருகுவே உருகுவே அர்ஜெண்டினா
1934 இத்தாலி இத்தாலி செக்கோஸ்லோவேகியா
1938 பிரான்ஸ் இத்தாலி ஹங்கேரி
2ம் உலகப்போர்
1950 பிரேசில் உருகுவே பிரேசில்
1954 ஸ்விட்சர்லாந்து மே. ஜெர்மனி ஹங்கேரி
1958 ஸ்வீடன் பிரேசில் ஸ்வீடன்
1962 சிலி பிரேசில் செக்கோஸ்லோவேகியா
1966 இங்கிலாந்து இங்கிலாந்து ஜெர்மனி
1970 மெக்ஸிகோ பிரேசில் இத்தாலி
1974 மே. ஜெர்மனி மே. ஜெர்மனி நெதர்லாந்து
1978 அர்ஜெண்டினா அர்ஜெண்டினா நெதர்லாந்து
1982 ஸ்பெயின் இத்தாலி ஜெர்மனி
1986 மெக்ஸிகோ அர்ஜெண்டினா மே. ஜெர்மனி
1990 இத்தாலி மே. ஜெர்மனி அர்ஜெண்டினா
1994 USA பிரேசில் இத்தாலி
1998 பிரான்ஸ் பிரான்ஸ் பிரேசில்

கோப்பையைப் பற்றிய விபரங்கள்:

World Cup Trophy
1970ம் ஆண்டில் பிரேசில் மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வென்ற பிறகு அந்தக் கோப்பை (ஜூல்ஸ் ரிமோட் கோப்பை) பிரேசிலிடம் நிரந்தரமாக தங்கி விட்டது. எனவே 1974ம் ஆண்டின் உலகக் கோப்பைக்காக 53 வடிவங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக இத்தாலி கலைஞரான 'சில்வியோ கஸ்ஸானிகா' வடிவமைத்த (அருகே உள்ள) கோப்பை தேர்ந்தெடுக்கப்பட்டது. இது 36 செ.மீ. உயரமும், 4.970 கிராம் எடையும் கொண்டது. முழுவதும் 18 கேரட் தங்கத்தாலேயே செய்யப்பட்டது. இதன் அடிப்பாகம் இரண்டடுக்கு 'மாலச்சைட்' (Malachite) என்ற பொருளால் செய்யப்பட்டது. இப்பாகத்தில் 17 சிறு பட்டயங்கள் பொர்த்த இடமுள்ளது. இதில் 2038ம் ஆண்டு வரை நடைபெறும் உலகக் கால்பந்து கோப்பை வெற்றியாளர்களின் பெயர்களை பொறித்து வைக்க இயலும். இக்கோப்பையை பன்னாட்டு கால்பந்து குழுமம் (FIFA) தன்னிடமே வைத்துக் கொள்ளும். வெற்றியடைந்த அணி இதே போன்ற தங்க முலாம் பூசப்பட்ட பிரதியை (replica) எடுத்துச் செல்லும்.