ஓட்டப்பந்தயங்கள் - Running Races

ஓட்டப்பந்தயங்கள்
நீண்ட தூர ஓட்டங்கள் மற்றும் நடை போட்டிகளின் விதிமுறைகள்.

மாரத்தான்:
சாலையில் ஓடும் போட்டி. போட்டியின் தூரம் 42,195 கி.மீ. இது கி.மு. 490ல் நடந்த மாரத்தான் போரில் (Battle of Marathon) வெற்றிச் செய்தியை கிரேக்கத்திற்கு சொல்ல ஒரு தூதுவன் 24 மைல் தூரம் (39 கி.மீ.) நிற்காமல் ஓடிச் சென்று தெரிவித்த காரணத்தால் இந்தப் போட்டிக்கு இப்பெயர் ஏற்பட்டது.

தடை தாண்டும் ஓட்டத்திற்கு தடைகளின் அளவுகள்:
எல்லா தடை தாண்டும் ஓட்டத்திற்கும் 10 தடைகள் அமைக்கப்படும். ஓடும் பொழுது இவைகள் தட்டி கீழே விழுந்தால் குற்றமில்லை.

ஆண்களுக்கான அளவுகள்: 110மீட்டருக்கு - 1.067மீட்டர்; 400மீட்டருக்கு - 0.914மீட்டர்;
பெண்களுக்கான அளவுகள்: 100மீட்டருக்கு - 0.838மீட்டர்; 400மீட்டருக்கு - 0.762மீட்டர்;

தொடர் ஓட்டத்திற்கான அளவுகள் (Relay races):
4 X 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பேட்டனை (Baton) கை மாற்றிக் கொள்வதற்கான தூரம் 20மீட்டர் (22 யார்ட்கள்).

நடை போட்டி:
நடை போட்டியின் விதிகள் கடுமையானவை. எப்பொழுதும் பாதத்தில் ஏதாவது ஒரு பாகம் தரையில் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். ஒவ்வொரு காலடிக்கும் கால் கணநேரம் நேராக நிற்க வேண்டும். நடை போட்டி 10கி.மீ. முதல் 50 கி.மீ தூரம் வரை நடைபெறும்.

ஸ்டீபிள்சேஸ் (Steeplechase):
3,000 மீட்டர் தூர ஸ்டீபிள்சேஸ் 7.5 சுற்றுக்களில் நடைபெறும். ஒவ்வொரு சுற்றிலும் மூன்று நிலையான தடைகள் இருக்கும். நீர்நிலையைத் தாண்டிக் குதிக்கும் தடை ஓடுகளத்திற்கு சற்று வெளிப்புறத்தில் அமைந்திருக்கும்.