பாட்மிண்டன் -Badminton

பாட்மிண்டன்
ஆடுகளத்தின் அளவுகள் மற்றும் ஸ்கோர்.

ஷட்டில்காக் எனும் இறகு பந்தை, ராக்கெட் மட்டையால் வலைக்கு மேலாக அடித்து விளையாடுதல்.

ஆடு தளத்தின் அளவுகள்:
13.4மீ 6.1மீ. நடுவில் 1.55மீட்டர் உயர வலை.
ஷட்டில்காக் எனும் இறகு பந்து சுமார் 5கிராம் எடையில் ஒரு கார்க் துண்டில் 16 இறகுகள் பொருந்தியதாக இருக்க வேண்டும். Shuttlecock

ஸ்கோர்:
ஒரு கேமில் 15 பாயிண்ட்கள் (பெண்கள் சிங்கிள்ஸில் 11 பாயிண்ட்கள்) எடுக்கும் அணி வெற்றி பெறும். ஒரு மாட்சில் இரு கேம் வென்ற அணியே வெற்றி பெற்ற அணியாகும்.

இருவர் ஆட்டத்தில் ஒருவர் சர்வீஸ் இழந்தால் இரண்டாம் நபருக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அவருக்குப் பின்னரே எதிர் அணிக்கு கொடுக்கப்படும்.

இரு அணிகளும் சமமாக 13 அல்லது 14 பாயிண்ட் எடுத்தால் முதலில் அந்தப் பாயிண்டை எடுத்த அணி விரும்பினால் 'செட்டிங்' எனப்படும் எக்ஸ்ட்ரா கேம் ஆட வேண்டும்.