கிரிக்கெட் - Cricket

கிரிக்கெட்
கிரவுண்ட் அளவுகள் மற்றும் ஸ்கோர்.

உலகில் கிரிக்கெட் விளையாடும் நாடுகள் மிகக் கொஞ்சம் தான். இது வரை 10 நாடுகள் மட்டுமே தங்களுக்குள் அதிகாரபூர்வமாக விளையாடிக் கொள்கின்றன. ஆனால் இந்த நாடுகளில் கிரிக்கெட்டிற்கு தீவிர ரசிகர்கள் மிக அதிகம்.

ஆடுகள அளவுகள்:
ஆடுகளத்தின் நடுவில் கவனத்துடன் தயாரிக்கப்பட்ட தளம் பிட்ச் என்றும் அதை சுற்றி இருக்கும் புல்வெளி பீல்ட் என்றும் அழைக்கப்படும்.
பிட்ச்சின் இரு புறமும் மூன்று ஸ்டம்ப்கள் கொண்ட விக்கெட் இருக்கும்.
விக்கெட்டுகளுக்கு இடையில் இருக்கும் பிட்ச்சின் நீளம் 22 யார்ட்கள், அகலம் சுமார் 10 அடி. விக்கெட்டிற்கு முன்னால் 4 அடி தூரத்தில் கிரீஸ் லைன் போடப்பட்டிருக்கும்.
பீல்ட் ஆடுகளத்தின் அமைப்பைப் பொறுத்து அமையும். நிர்ணயம் செய்யப்பட்ட அளவுகள் இல்லை. பீல்டின் எல்லைக்கோடு பவுண்டரி என்றழைக்கப்படும்.

ஒரு அணிக்கு 11 பேர். ஒரு அணி பீல்ட் செய்யும் போது எதிர் அணியினர் பேட்டிங் செய்வார்கள். இரு அணியும் பேட் செய்து முடிப்பது ஒரு இன்னிங்ஸ் எனப்படும். பீல்ட் செய்யும் அணியின் 11 வீரர்களும், பேட் செய்யும் அணியின் 2 வீரர்களும் களத்தில் இருப்பார்கள்.


டேஸ்ட் மேட்ச்:

5 நாட்களுக்கு தொடர்ந்து நடக்கும். இரு இன்னிங்ஸ் விளையாட வேண்டும். இரு இன்னிங்ஸிலும் அதிக ரன் எடுத்த அணி வென்றதாக கருதப்படும்.


ஒரு நாள் போட்டிகள்

இரு அணிகளும் 50 ஓவர்களுக்கு மிகாமல் ஒரு இன்னிங்ஸ் ஆட வேண்டும். அதிக ரன் எடுத்த அணி வெற்றி பெறும்.