கால்பந்து - Football

கால்பந்து
ஆடுகளம், கருவிகளின் அளவுகள்.

soccer
'சாக்கர்' என்று பரவலாக அறியப்படும் கால்பந்து உலகின் மிக அதிகமாக விரும்பப்படும் விளையாட்டுகளில் ஒன்று. பல நாடுகளிலும் தனிக்குழுக்களுக்கே தீவிர ரசிகர்கள் உண்டு.

ஆடுகள அளவுகள்:
அளவுகள் களத்திற்கு களம் சற்று மாறும். ஆனால் பெனாலிட்டி ஏரியா, கோல் போஸ்ட் அளவுகள் ஒன்று தான்.

நீளம்: 90 - 120 மீட்டர் வரை
அகலம்: 45 - 90 மீட்டர் வரை
கோல் போஸ்ட்:
அகலம் - 7.32 மீட்டர்.
உயரம் - 2.44 மீட்டர்.
பெனாலிட்டி ஏரியா :
நீளம் - 16.47 மீ
அகலம் - 40 மீ
பெனாலிட்டி ஸ்பாட்:
கோல் போஸ்டில் இருந்து 11 மீ.

10 ஆட்டக்காரர்களும் ஒரு கோல்கீப்பரும் கொண்ட இரு டீம்கள் ஆட வேண்டும்.


பந்தை காலாலோ தலையாலோ எதிரணியின் கோல் போஸ்டிற்குள் அனுப்ப வேண்டும். கையில், தோளில் படக் கூடாது.


Football

90 நிமிட ஆட்டம்:
ஒரு கேம் 45 நிமிடங்கள் கொண்ட இரு பகுதிகளாக ஆடப்படும். முடிவு அறிய வேண்டிய நாக்-அவுட் போட்டிகளில் இரு அணிகளும் சமமான கோல் அளவிலிருந்தால் இரு 15 நிமிட எக்ஸ்ட்ரா பகுதிகள் ஆடப்படும்.


கோல்கீப்பர் மட்டும் கையால் தொடலாமா?

கோல்கீப்பர்கள் பெனாலிட்டி ஏரியாவிற்குள் மட்டும் பந்தை கையால் தொடலாம். வெளியில் என்றால் தனது அனியினர் தன்னிடம் பாஸ் செய்தால் மட்டும் கையால் தொடலாம்.


உலகக் கோப்பை:

4 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சாக்கர் உலகக் கோப்பை, ஒலிம்பிக்குக்கு இணையாக மதிக்கப்படுகிறது.


உலகக் கோப்பை வென்ற நாடுகளின் பட்டியல்