ஸ்குவாஷ் - Squash

ஸ்குவாஷ்
அறிமுகம், பந்து, ஆடும் முறைகள்.

ஆடும் முறை:

எதிர் சுவற்றின் அடிப்பாகத்தில் 48செ.மீ. உயரத்திற்கு 'போர்ட்' எனப்படும் தகர ஷீட் அமைக்கப்பட்டிருக்கும். அடிக்கும் போது எதிர் சுவற்றில் இந்த போர்டில் படாமல் அடிக்க வேண்டும். எதிர் சுவரில் முதலில் பட்டபின் பக்கவாட்டுச் சுவர்களில் பந்து படலாம். இதன் மூலம் எதிராளியை திணறடிப்பார்கள். இவ்வாறு சுவற்றில் பட்டு நேரடியாகவோ, அல்லது அதன் பின் தரையில் ஒரு முறை பட்டோ வரும் பந்தை மற்ற ஆட்டக்காரர் எதிர் சுவற் றை நோக்கி அடிக்க வேண்டும்.

எதிராளி அடிப்பதற்குள் பந்து இரு முறை தரையில் பட்டால் பந்தை அடித்தவருக்கு புள்ளிகள் வழங்கப்படும். பந்தை அடித்தவர் அந்த முறை சர்வ் செய்தவராக இருந்தால் மட்டுமே புள்ளிகள் கிடைக்கும், இல்லாவிட்டால் எதிராளிக்கு அடுத்த சர்வ் வழங்கப்படும்.

ஒன்பது புள்ளிகள் பெற்றால் ஒரு ஆட்டத்தில் (Game) வெற்றி பெறலாம். ஒரு மேட்ச்சின் வெற்றி/ தோல்வி, மூன்று அல்லது ஐந்து ஆட்டங்களைக் கொண்டு நிர்ணயிக்கப்படும்.

பந்து:

பந்து 40 - 41 மில்லிமீட்டர் விட்டம் உடையதாக இருக்கும். பந்தின் இயல்பு வேகத்தை அதன் மேல் உள்ள வண்ணப்புள்ளியைக் கொண்டு அறியலாம்.

வண்ணம் வேகம்

மஞ்சள் புள்ளி மிக மெதுவாக
வெள்ளை புள்ளி மெதுவாக
சிவப்பு புள்ளி வேகம்
நீலப் புள்ளி மிக வேகம்

புதிதாக ஆடுபவர்கள் வேகப் பந்துகளை உபயோகிப்பார்கள். தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஆட்டங்களில் ஒளிரும் பந்துகளை உபயோகிப்பதுண்டு.

உலக சாம்பியன்ஷிப்:

ஆண்கள் ஆட்டங்களில் பாகிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து முன்னனியில் இருக்கிறார்கள். பெண்கள் ஆட்டங்களில் நியுசிலாந்தைச் சேர்ந்தவர்கள் முன்னனியில் இருக்கிறார்கள்.