டேபிள் டென்னிஸ் - Table Tennis

டேபிள் டென்னிஸ்
அறிமுகம், மேஜை அளவுகள், ஆடும் முறைகள்.

tt_table
அறிமுகம்:

19ம் நூற்றாண்டின் இறுதியில் 'பிங்-பாங்' என்று அறியப்பட்ட 'டேபிள் டென்னிஸ்' தற்போது உலகம் முழுதும் பிரபலம். 1988ல் ஒலிம்பிக்ஸில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.


ஒரு மேஜையின் இருபுறமும் நின்று சிறிய மட்டையைக் கொண்டு ப்ளாஸ்டிக் பந்தை அடித்து ஆடும் விளையாட்டு. மேஜையின் நடுவில் சிறிய வலை கட்டப்பட்டிருக்கும். மேஜையின் நமது பகுதியில் பட்டு எழும்பி வரும் பந்தை, தரையில் படாமல் ஒரே அடியில் எதிராளியின் மேஜைப் பகுதியில் படுமாறு அடிக்க வேண்டும்.


மேஜே:

மேஜே அளவுகள்:
அகலம்: 1.525மீட்டர்
நீளம்: 2.74மீட்டர்
பந்தின் விட்டம்: 38மி.மீ.

மேஜை பரப்பு பச்சை நிறத்திலும், கோடுகள் வெள்ளை நிறத்திலும் இருக்கும். மேஜை நடுவே நீளவாக்கில் போடப்பட்ட வெள்ளைக் கோடு இருவர் ஆட்டத்திற்கானது.


ஒரு ஆட்டத்திற்கு 21 புள்ளிகள் (Points). வெற்றி பெறுபவர், மற்றவரை விட இரு புள்ளிகள் கூடுதல் பெற வேண்டும். ஆண்கள் போட்டிகளில் 5 ஆட்டங்களில் அதிக வெற்றிகள் பெற்றவரையும், பெண்கள் போட்டிகளில் 3 ஆட்டங்களில் அதிக வெற்றிகள் பெற்றவரையும், வெற்றியாளர் என அறிவிக்கப்படும்.

உலகக் கோப்பை:

ஆண்கள் அணி உலக சாம்பியன் போட்டி, ஸ்வாதிலிங் கோப்பை (Swathyling Cup) எனவும், பெண்கள் அணி உலக சாம்பியன் போட்டி, கார்பில்லோன் கோப்பை (Corbillon Cup) எனவும் வழங்கப்படும்.

மட்டை:

மட்டையின் பரப்பில் சொரசொரப்பான 2மி.மீ உருண்டைகள் கொண்ட ரப்பர் தாள் ஒட்டப்பட்டிருக்கும். புள்ளி துவக்கத்தில் சர்வ் செய்யும் போது பந்தை கையிலிருந்து உயரே தூக்கிப் போட்டு மட்டையால் நமது மேஜை பகுதியில் முதலில் பட்டு எதிராளி பகுதிக்கு செல்லுமாறு அடிக்க வேண்டும்.