செயிண்ட லூசியா-St.Lucia

செயிண்ட லூசியா
ரிசார்ட்டுகள் நிறைந்த குட்டித் தீவு நாடு.

Top மேலேGo Top

செயிண்ட் லூஸியா பேக்கேஜ் டூர்களுக்கென்றே ஏற்பட்டது போன்ற தீவு. ஏராளமான ரிசார்ட்டுகள் உண்டு. ஆனாலும் இன்னும் செயற்கைத்தனம் அதிகமில்லாமல் இருக்கிறது. பெரும்பாலான இடங்கள் கிராமியத்தனத்துடன், சிறு மீனவ கிராமங்கள், ஆளரவமில்லாத ஒதுக்குப்புறமான கடற்கரைகள், பரந்த வாழைத் தோப்புகள், மலைக்காடுகள் என்று ரம்மியமான கலவையாக இருக்கிறது.

தீவின் சுண்டியிழுக்கும் இயற்கைக் காட்சிகளுக்கு தெற்குப் பக்கம் செல்ல வேண்டும். இங்கே தான் பைட்டான்கள் என்றும் அழைக்கப்படும் இரண்டு உயர்ந்த எரிமலைகள் கடற்கரையிலிருந்து உயர்ந்து நின்று தீவின் தனித்துவ அடையாளமாக இருக்கிறது. எரிமலை என்றதும் கவலைப்படத் தேவையில்லை, இவை கடைசியாக வெடித்தது 1766ல்.

நாட்டின் பொது விபரங்கள், வரலாறு போன்றவை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

பார்க்க வேண்டியவை:
கஸ்ட்ரீஸ்:
உணவுப் பண்டத்தின் பெயர் என்று நினைக்க வேண்டாம். இது தான் தீவின் தலைநகரம் மற்றும் வியாபார மையம். ஒரு இயற்கை துறைமுகத்தில் அமைந்துள்ள நகரம். நகரின் கலகலப்பான பகுதி ஜெரீமி மற்றும் பேய்னியர் தெருக்கள் தான். இங்கு தீவில் விளைந்த பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் ஏராளமாக கிடைக்கும். ப்ரெஞ்சுக்காரர்களால் 18ம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட நகரம். இது 1785லும், 1812லும் பிறகு கடைசியாக 1948லும் மொத்த நகரமே தீக்கிரையானதால் பழமையான கட்டிடங்கள் அதிகமில்லை. கடைசி தீ விபத்தில் தப்பிய டெரக் வால்காட் சதுக்கத்தில் மரவேலைப்பாடுகள் நிறைந்த 19ம் நூற்றாண்டு கட்டிடங்களும், ஒரு விக்டோரிய பாணி நூலகமும், ஒரு கதீட்ரலும் உள்ளது. இங்குள்ள ஒரு உயர்ந்த சாமன் மரம் 400 வருட பழமையானது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ரோட்னி பே:
தீவின் மிகப் பெரிய பாதுகாக்கப்பட்ட வளைகுடா பகுதி (Bay Area). முகப்பில் ஒரு புறம் ரிசார்ட்டுகள் நிறைந்த ரெடுயிட் கடற்கரையும், எதிர் புறம் குரோஸ் ஐலெட்டின் மீனவ கிராமமும் உள்ளது. இரு பகுதிகளுக்கும் இடையில் செயற்கையாக வெட்டி உருவாக்கப்பட்ட கால்வாய் வழியாக கடலில் இருந்து இந்த பெரிய ஏரிக்கு படகுகள் வந்து சேர்ந்து தீவின் மிகப் பெரிய படகுத் துறைமுகமாக (Yatching Port) விளங்குகிறது. ரோட்னி பே மெரீனா என்று அழைக்கப்படும் இந்தப் பகுதியில் படகில் சுற்றுலா வருபவர்களை சந்திக்கலாம். படகுக்காரர்களை சந்தித்து பேசி அவர்கள் படகு மூலமாகவே பக்கத்து தீவு நாடுகளுக்கும் செல்லலாம்.

குரோஸ் ஐலெட் துருப்பிடித்த தகரக் கூரையுடன் கூடிய சாதாரண மர வீடுகளும், ஏராளமான மதுக் கடைகளும், கரை நிறைய பெயிண்ட் செய்யப்பட்ட மரப்படகுகளும் கொண்ட சின்னஞ்சிறு நகரம். இங்கு சங்கு ஊதும் சத்தம் கேட்டால் கடலுக்கு சென்ற மீன்பிடி படகுகள் மீன்களுடன் கரைக்கு திரும்புகிறது என்று அர்த்தம். இங்கு பார்க்க அதிக இடங்கள் இல்லாவிட்டாலும் கிராம மக்களை சந்திக்க ஏற்ற இடம். இங்கு வெள்ளிக்கிழமை இரவு நடக்கும் 'ஜம்ப்-அப்' கொண்டாட்டம் மிகப் பிரசித்தம்.

புறாத் தீவு தேசியப் பூங்கா:
Top மேலேGo Top